கடல் புறா (புதினம்)

சாண்டியல்யனின் புதினம்

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். சிறீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கதைச் சுருக்கம் தொகு

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.

பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

கதை மாந்தர் தொகு

  • கருணாகர பல்லவன் - சோழர் படைத் தலைவன்.
  • அநபாயர் - சோழ இளவரசர்.
  • குணவர்மன் - ஶ்ரீ விஜய இளவரசர்
  • காஞ்சனா தேவி - குணவர்மனின் மகள்.
  • மஞ்சளழகி - ஜெயவர்மன் மகள்
  • அமீர் - அராபிய வணிகன், அநபாயரின் நண்பன்.
  • அகூதா - அமீரின் ஆசான், சீன நாட்டைச் சேர்ந்தவன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_புறா_(புதினம்)&oldid=3839949" இலிருந்து மீள்விக்கப்பட்டது