கடையநல்லூர்


கடையநல்லூர் (Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள், திராட்சை, நெல் ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.

கடையநல்லூர்
—  முதல் நிலை நகராட்சி  —
கடையநல்லூர்
இருப்பிடம்: கடையநல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°04′40″N 77°20′43″E / 9.077900°N 77.345200°E / 9.077900; 77.345200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ( திமுக)
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,47,034 (2020)

1,339/km2 (3,468/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


217 மீட்டர்கள் (712 அடி)

குறியீடுகள்

இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் மலைகளின் அடிவாரத்தில் குற்றாலம் அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை சாரலுக்கு மற்றும் நெல் வயல்களுக்குப் பெயர் பெற்றது.

போக்குவரத்து தொகு

கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் NH744 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில்,செங்கோட்டை,புளியங்குடி,சுரண்டை,சேர்ந்தமரம்,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரை,அம்பாசமுத்திரம்,பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் புனலூர்,கொல்லம்,திருவனந்தபுரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பெயர்க் காரணம் தொகு

கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனைச் சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

புவியியல் தொகு

கடையநல்லூர் 9°05′N 77°21′E / 9.08°N 77.35°E / 9.08; 77.35[3] என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 191 m (627 அடி). நகரின் மொத்தப் பரப்பு 52.25 skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது.

புள்ளி விவரங்கள் தொகு

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,47,034 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் இந்துக்கள் 55.98 %, முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.

கல்விக்கூடங்கள் தொகு

  • ருக்மணி கல்வியியல் கல்லூரி, தென்காசி-மதுரை மெயின்ரோடு, மங்களாபுரம், கடையநல்லூர்
  • மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
  • தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, வாணியர் தெரு.
  • ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
  • அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
  • அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
  • ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
  • உலகா மேனிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
  • ஃபாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.
  • ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, மேலக்கடையநல்லூர்
  • மெர்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி, கடையநல்லூர்
  • காந்தி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம்

வழிபாட்டுத் தலங்கள் தொகு

இந்து ஆலயங்கள் தொகு

  • கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
  • அருள்மிகு மந்தை ஸ்ரீ சடைமாரியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கருப்பசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
  • செங்குளத்து செஞ்சுடலை மாடசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்;
  • 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில், மேலக்கடையல்லூர்;
  • கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்;
  • அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்;
  • முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்;
  • பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்;
  • அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்;
  • முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்;
  • முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • [[Devendrakula velalar Kaliamman Kovil , முத்து கிருஷ்ணாபுரம்;
  • தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்;
  • கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.

இசுலாமியப் பள்ளிகள் தொகு

  • காதர் மைதீன் குத்பா பள்ளி வாசல், பேட்டை
  • மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசல்
  • மதினா நகர் ஜும்மா பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் அக்சா
  • மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
  • தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
  • இக்பால் நகர் புதுப்பள்ளி
  • ஜாமிவுல் அன்வர் பள்ளிவாசல்
  • தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
  • மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு
  • நத்தர்ஷா தைக்கா
  • திராப்ஷா தைக்கா
  • தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி
  • காமில் வலி ஷெஹ்னா தர்கா

=கிறிஸ்தவ ஆலயங்கள் = தொகு

  • பெத்தேல் ஏ.ஜி. வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
  • கிங் ஆப் கிங்ஸ் பேராலயம், மதுரை மெயின் ரோடு மங்களபுரம், கடையநல்லூர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Falling Rain Genomics, Inc - Kadaiyanallur
  4. "Census Info 2011 Final population totals". 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையநல்லூர்&oldid=3868793" இலிருந்து மீள்விக்கப்பட்டது