கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை

கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை (Building Energy Management Systems) கட்டிடத் தன்னியக்க முறைமை என்பது கட்டிட முறைமைகளையும், கட்டிடத்தில் சக்திப் பயன்பாட்டையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கணினியை அடிப்படையாகக் கொண்ட முறைமையாகும். இவை செயல் திறனிலும், செயல் முறைகளிலும் பல்வேறுபட்டவையாக இருந்தபோதிலும், பெரும்பாலான முறைமைகள் வளிப் பதன அமைப்பு, ஒளியமைப்பு போன்ற சேவைகளைக் கண்காணிக்கவும், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. இம் முறைமைகள், தீத்தடுப்பு மற்றும் உயிர் காப்பு, பாதுகாப்பு, உயர்த்திகள் போன்ற வேறு பல தன்னியக்கக் கட்டிடச் செயற்பாட்டு முறைமைகளுடனும் ஒன்றிணைந்து இயங்க முடியும். பல கட்டிடங்களை ஒரு இடத்திலிருந்து கட்டுப் படுத்தக்கூடிய முறைமைகளும் உள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று தொலைவில் அமைந்திருக்ககூடிய பல கட்டிடங்களை இணையம் வழியாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை கொண்ட முறைமைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. புவியியல் அடிப்படையில் பரந்து அமைந்திருக்ககூடிய செயற்பாடுகளின் மேலாண்மை தொடர்பில் இத்தகைய முறைமைகள் முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடியன.