கட்டுநாயக்கா

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
(கட்டுநாயக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கட்டுநாயக்கா (Katunayake, சிங்களம்: කටුනායක), இலங்கையின் மேல் மாகாண நகரமான நீர்கொழும்பின் புறநகராகும். இங்குதான் இலங்கையின் முதன்மை பன்னாட்டு வான்வழி வாயிலான பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கொழும்பு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. 1977இல் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் திறந்த பொருளியல் கொள்கைகளினால் இங்குள்ள பெரும் நிலப்பகுதி கட்டற்ற வணிக வலயம் (தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு வலயம்) உருவாக்கிட வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா
කටුනායක
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் கட்டுநாயக்கவிலுள்ள வானூர்திநிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.[1]

போக்குவரத்து தொகு

 
பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கட்டுநாயக்க

நாட்டின் முதன்மை வானூர்தி நிலையமான பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டுநாயக்கவில் அமைந்துள்ளது.

இலங்கை தொடருந்து போக்குவரத்தின் புத்தளம் தடம், கட்டுநாயக்க வழியேச் செல்கிறது; இத்தடத்தில் கட்டுநாயக்க, கட்டுநாயக்க தெற்கு, வானூர்தி நிலையம் என மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன.

தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் கொழும்பு-கட்டுநாயக்க விரைவுச்சாலையின் வடக்கு முனையாக கட்டுநாயக்க உள்ளது. இந்த விரைவு நெடுஞ்சாலை கொழும்பு நகரை ஏ-1 நெடுஞ்சாலையுடன் பெலியகோடா என்னுமிடத்தில் இணைக்கிறது.[2] தற்போது கொழும்பிலிருந்து நீர்கொழும்பு செல்லும் ஏ-3 நெடுஞ்சாலை கட்டுநாயக்கவை இணைக்கிறது.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. "SriLankan Airlines - Contact Us / SriLankan Airlines Offices பரணிடப்பட்டது 2009-09-18 at the வந்தவழி இயந்திரம்." சிறீலங்கன் எயர்லைன்ஸ். Retrieved on 29 September 2009.
  2. "Colombo - Katunayake Expressway". Road Development Authority. Archived from the original on 2009-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுநாயக்கா&oldid=3547427" இலிருந்து மீள்விக்கப்பட்டது