கதோதரா (Kadodara) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரம் ஆகும். சூரத் , பர்தோலி சாலையின் இடைவழியில் தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 8 ஆகிய இரண்டும் சந்திக்கும் இடமாக கதோதரா உள்ளது. இந்நகராட்சியின் குடிமைப் பணிகள் யாவும் சூடா எனப்படும் சூரத் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. சூரத் மற்றும் பர்தோலி நகரங்களுக்கு அண்மையில் கதோதரா அமைந்திருப்பதால் பல்வேறு தொழிலதிபர்களை இந்நகராட்சி பெரிதும் ஈர்க்கிறது. பல குடியிருப்புப் பகுதிகளும் இங்கு கட்டப்பட்டு வருகின்றன.

கதோதரா
Kadodara
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
அரசு
 • நிர்வாகம்கதோதரா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்3 km2 (1 sq mi)
ஏற்றம்
18 m (59 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்14,519
 • அடர்த்தி4,800/km2 (13,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அண்மை நகரம்சூரத்

புவியியல் அமைப்பு தொகு

21.16156° வடக்கு 72.96234° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கதோதரா நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 18 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 14,819 ஆகும். இம்மக்கள் தொகையில் 68 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 32 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். அண் நகரின் படிப்பறிவு சதவீதம் 68% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 77% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 50% ஆகும். மக்கள் தொகையில் 12 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதோதரா&oldid=3575059" இலிருந்து மீள்விக்கப்பட்டது