கனேடிய பல்கலாச்சார வானொலி

கனேடிய பல்கலாச்சார வானொலி (CJSA-FM CMR) ஒரு பல்கலாச்சார வானொலியாகும். இது டொராண்டோவில் தனது ஒளிபரப்பை மேற்கொள்கிறது.சிஎம்ஆர். வானொலி நிறுவனம் புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ள நான்கு HD(Hybrid Digital) வானொலி சேவைகளிற்கான பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகியது. நான்கு சேவைகளில் முதலாவதில் தற்போதைய சிஎம்ஆர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். இரண்டாவதில், தனியான 24 மணி நேர தமிழ் மொழி ஒலிபரப்பும், மூன்றாவதில் இந்தி மற்றும் உருது மொழிகளில் ஒலிபரப்பும் நான்காவதில் பஞ்சாபி மொழி ஒலிபரப்பும் இடம்பெறும். தற்போது விற்பனைக்குள்ள புதிய கார்களில் 90வீதமானவை HD ஒலிவாங்கிகள் பொருத்தபட்டவையாக இருக்கும். HD வானொலிக் கருவி உள்ளவர்கள், 101.3 அலைவரிசையைத் தெரிவு செய்து, அதில் உள்ள நான்கு HD சேவைகளில் ஒன்றைத் தெரிவு செய்து ஒலிபரப்பைக் கேட்கக் கூடியதாக இருக்கும். கனடாவில் நவீன HD பன்முகப்படுத்தப்பட்ட சேவையை சிஎம்ஆர் நிறுவனம்தான் முதன் முதலாக அறிமுகம் செய்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.Call 416-644-6300

கனேடிய பல்கலாச்சார வானொலி
உரிமமுள்ள நகரம்டொராண்டோ, ஒன்டாரியோ,கனடா
வணிகப்பெயர்CMR 101.3 FM
குறிக்கோளுரைCMR
Diversity FM 101.3
அதிர்வெண்101.3 MHz (FM)
முதல் ஒலிபரப்பு2004
வானொலி முறைபன்மொழி
Power1 கிலோவாட் (KW)
உரிமையாளர்கனேடிய பல்கலாச்சார வானொலி
இணையதளம்[CMR]

மேற்கோள்கள் தொகு