கபர்து மக்கள்


கபர்து மக்கள், வடக்குக் காக்கேசஸ் பகுதியில் வாழும் மக்கள் இனத்தோராவர். இவர்கள் தமது இனத்தின் பன்மைப் பெயரான கபார்தீன் என்பதால் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள். தொடக்கத்தில் அடிகே பழங்குடியின் அரை-நாடோடிக் கிழக்குப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் இப்போதும் தங்களை அடிகே பழங்குடியினராகவே கருதிவருகின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ரஷ்யாவில் இவர்களுடைய மக்கள்தொகை சுமார் 520,000 ஆகும். துருக்கி, ஜோர்ஜியா ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவ்வினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.

கபர்து
மொத்த மக்கள்தொகை
(600,000 (மதிப்பீடு))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ரஷ்யா ( குறிப்பாக கபர்டானோ-பல்கரியாவில்), துருக்கி, ஜோர்ஜியா
மொழி(கள்)
கபர்திய மொழி, ரஷ்ய மொழி,
சமயங்கள்
சுன்னி இஸ்லாம், Eastern Orthodoxy
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அடிகே, வேறு "சிர்க்கேசிய" மக்கள்


பெரும்பாலான கபர்துக்கள், சுன்னி முஸ்லிம்கள் ஆவர். எனினும், வட ஒசெட்டியாவின் மொஸ்டொக் மாவட்டத்தில் வாழும் கபர்துக்கள், பழமைவாத கிறிஸ்தவர்களாவர். இவர்கள், காக்கேசிய மொழிக்குடும்பத்தின், கிழக்கு எல்லையில் உள்ள வடமேற்குக் காக்கேசிய மொழிக்குழுவைச் சேர்ந்த கபர்திய மொழியைப் பேசுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபர்து_மக்கள்&oldid=1706168" இலிருந்து மீள்விக்கப்பட்டது