கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்

சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். [1]

கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்
பெயர்
பெயர்:கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கருப்பத்தூர்
மாவட்டம்:கரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிம்மபுரீசுவரர்
தாயார்:சுகந்த குந்தளாம்பாள்

சன்னதிகள் தொகு

இச்சிவாலய மூலவரை லட்சுமி நரசிம்மர் வழிபட்டுள்ளார். இதனால் சிம்மபுரீசுவரர் என்ற பெயர் மூலவருக்கு ஏற்பட்டது. அம்பாளை குந்தளாம்பாள் என்றும், சுகந்த குந்தளாம்பாள் என்றும் அழைக்கின்றனர்.[2] அம்பாளிடம் வேண்டியதை நடக்கும் என்ற பொருளில் வரப்ரதாதி என்று குறிப்பிடுகின்றனர். வலஞ்சுழி விநாயகர், தனித்த ஆறுமுகப் பெருமான், அஷ்ட கை பைரவர், சௌந்தர் மஹாலட்சுமி, சப்த கன்னியர்கள் சிலைகள் உள்ளன. [2]

தல சிறப்பு தொகு

 
கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயிலில் உள்ள சிவாலய நந்தி.
  • இத்தல மூலவரை லட்சுமி நரசிம்மர் வணங்கியுள்ளார்.[2]
  • நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம் தங்களின் குறைகளைச் சொன்னால் இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார்.[2]
  • அம்மன் சன்னதியில் மஞ்சள் தொட்டி உள்ளது. அதில் எண்ணற்ற மஞ்சள்கள் பக்தர்களால் போடப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்றினை எடுத்து தன்னுடைய வேண்டுதல்களைக் கூறி தினமும் தேய்த்து பூசி வந்தால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு நிறைவேறினால் எடுத்துச் சென்ற மஞ்சளுக்குப்பதிலாக மஞ்சள்களை பக்தர்கள் அந்தத் தொட்டியில் போடுகிறார்கள்.

காட்சியகம் தொகு

இவற்றையும் காண்க தொகு


ஆதாரங்கள் தொகு

  1. "கருப்பத்தூர் கோயில் தேரோட்டம் - கரூர் District Dinakaran".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 "அருள்மிகு சிம்மபுரீஸ்வரர் திருக் கோவில் (கருப்பத்தூர்)".