கருப்பூர் மு. அண்ணாமலை

கருப்பூர் மு. அண்ணாமலை (பிறப்பு: செப்டம்பர் 18, 1948) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கருப்பூரில் பிறந்த இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். 33 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இவர் “பொன்னி” எனும் புனைப்பெயரில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள நூலகங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நூலகங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதிய "தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள் தொகு

  • தீர்க்கப்படாத நியாயன்கள்[1]
  • குருதிச்சோறு[1][2]
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்[3]
  • சங்க கால வள்ளல் கதைகள்

ஆதாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பூர்_மு._அண்ணாமலை&oldid=3614092" இலிருந்து மீள்விக்கப்பட்டது