கரோஷி (過労死 Karōshi?) (過労死) என்பது ஒரு சப்பானிய மொழிச் சொல்லாகும். இதை "பணிச்சுமை மரணம்" என மொழிபெயர்க்கலாம். இது கூடுதலான பணிச்சுமையினால் ஏற்படும் மரணத்தைக் குறிக்கிறது. கரோஷி மரணங்களின் முதன்மைக் காரணங்களாக மன அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை உள்ளன. தென் கொரியாவில் இந்த நிகழ்வு பரவலாக உள்ளது, அங்கு இது குரோசாசா (과로사/過勞死) என குறிப்பிடப்படுகிறது. சீனாவில், அதிக உழைப்பு தூண்டலால் ஏற்படும் மரணம் கௌலாசோ (மரபுவழி: 過勞 死 எளிமையாக்கம்: 过劳 死) என்று அழைக்கப்படுகிறது.

வலாறு தொகு

சப்பானின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனத்தின் சிப்பம்கட்டும் பிரிவில் பணிபுரிந்த 29 வயதான ஆண் தொழிலாளியின் 1969 ஆம் ஆண்டு இறப்புதான் முதல் காரோஷி இறப்பாக அறிவிக்கப்பட்டது.[1] 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கூடுதல் பணிச்சுமையின் காரணமாக மேலும் அதிகமானோர் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. 1982 ஆம் ஆண்டு இந்த விவகாரம் குறித்து வெளியான ஒரு புத்தகம் இது குறித்து பொதுவெளிக்கு கொண்டு வந்தது, என்றாலும் 1980 களின் பிற்பகுதியில், சப்பானில் பொருளாதாரதார வீக்கம் ஏற்பட்ட காலகட்டத்தில், பல முதன்மை வணிக நிறுவனங்களில் இருந்த பல உயர்நிலை நிர்வாகிகளின் திடீர் மரணங்கள் இந்த சிக்கல் குறித்து அந்த காலகட்ட சப்பானிய பொது வாழ்வில் வெளிப்பட்டது. இந்த பணி அழுத்தமானது தொழிலாளர்களுக்கான தீவிரமான அச்சுறுத்தலாக கருதப்பட்டது. சப்பான் தொழிற்சாலை அமைச்சு கரோஷி மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போரினால் சப்பானில் ஏற்பட்ட அழிவினால், போருக்கு பிந்தைய தசாப்தங்களில் சப்பானின் பொருளாதார வளர்ச்சிக்காக அம்மக்கள் கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது. இது புதிய கொள்ளை நோய் என அழைக்கப்பட்டது. ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரமும் ஒரு வாரத்துக்கு, 6-7 நாட்களுக்கும், பணிபுரிவது என்பது, உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பாதிக்கப்பை ஏற்படுத்தியது.[2][3] கரோஷி பற்றி பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் ஒரு கட்டுரையில்,[4] பின்வரும் நான்கு வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன:

  1. திரு. அ. ஒரு பெரிய சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வாரம் 110 மணி நேரம் (ஒரு மாதம் அல்ல) வேலை செய்தார் 34 வயதில் மாரடைப்பால் இறந்தார். அவரது மரணம் லேபர் ஸ்டாண்டர்ட்ஸ் ஆஃபீஸ் நிறுவனத்தால் வேலை பளுவால் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  2. திரு. ஆ. பேருந்து ஓட்டுநர், இவர் ஆண்டு ஒன்றிற்கு 3,000 மணிநேரம் வேலை செய்ததார். அவருக்கு 37 வயதில் பக்கவாதம் ஏற்பட்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் வேலைபளுவால் ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது.
  3. திரு. இ. டோக்கியோவில் உள்ள ஒரு பெரிய அச்சு நிறுவனத்தில் ஆண்டுக்கு 4,320 மணிநேரம் வேலை செய்தார். 58 வயதில் மாரடைப்பால் இறந்தார். அவரது கணவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி இழப்பீடு பெற்றார்.
  4. திருமதி ஈ. 22 வயதான செவிலியர் மாதத்துக்கு ஐந்து முறை 34 மணிநேர தொடர் வேலையினால் மாரடைப்பால் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. Katsuo Nishiyama and Jeffrey V. Johnson (February 4, 1997). "Karoshi-Death from overwork: Occupational health consequences of the Japanese production management". International Journal of Health Services இம் மூலத்தில் இருந்து February 14, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090214232217/http://workhealth.org/whatsnew/lpkarosh.html. பார்த்த நாள்: June 9, 2009. CS1 maint: Uses authors parameter (link)
  2. Japanese salarymen fight back The New York Times - Wednesday, June 11, 2008
  3. Recession Puts More Pressure on Japan's Workers Business Week, January 5, 2009 பரணிடப்பட்டது சனவரி 7, 2015 at the வந்தவழி இயந்திரம்
  4. "Case Study: Karoshi: Death from overwork". 23 April 2013. பார்க்கப்பட்ட நாள் 6 September 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோஷி&oldid=2765497" இலிருந்து மீள்விக்கப்பட்டது