கலாட் (ஆங்கிலம்: Qalat (பஷ்தூ மொழி: قلات‎) என்பது தெற்கு ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மேற்கே கந்தகார் நகரையும் கிழக்கே கானி நகரையும் இணைக்கிறது. 2006 ஆம் ஆண்டு இந்நகரத்தின் அருகில் விமான நிலையம் ஒன்றும் கட்டப்பட்டது. இது அமெரிக்காவின் மறுநிர்மாணத் திட்டத்தின் கீழ் இப்பகுதியை வளப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டது ஆகும். இந்நகருக்கு கலாட், கலாட்-இ-கில்ஸாய், கலாட்-இ-தோகி, கலாட்-இ-நஸர் மற்றும் கலாட்-இ-கில்ஜி என்ற பெயர்களும் உண்டு.[1][2][3]

கலாட்
நாடு ஆப்கானிஸ்தான்
மாகாணம்சாபுல் மாகாணம்
ஏற்றம்5,090 ft (1,550 m)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்32,000
நேர வலயம்UTC+4:30

மேற்கோள்கள் தொகு

  1. "The State of Afghan Cities Report 2015". Archived from the original on 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  2. "The State of Afghan Cities Report - vol 2 2015". Archived from the original on 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  3. USAID/Afghanistan: First Airstrip in Zabul Province பரணிடப்பட்டது 2007-08-07 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாட்&oldid=3889872" இலிருந்து மீள்விக்கப்பட்டது