கலாநிதி மாறன்

தமிழக அரசியல்வாதி

கலாநிதி மாறன் (பிறப்பு: சூலை 24, 1965) சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 78ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 1205ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.

கலாநிதி மாறன்
Kalanithi Maran
பிறப்புசூலை 24, 1965 (1965-07-24) (அகவை 58)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, ஸ்கரான்டன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசன் குழும நிறுவனர்
சொத்து மதிப்பு$ 300 கோடி (2021)[1]
வாழ்க்கைத்
துணை
காவேரி
பிள்ளைகள்காவ்யா

இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சராவார்.

கல்வி தொகு

சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். லயோலா கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படிப்பை படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்கரான்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். காவேரி மாறன் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்கு காவ்யா மாறன் என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ஆம் ஆண்டுப் பிறந்தது.

ஸ்பைஸ் ஜெட் தொகு

இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

தொழில் தொகு

படிப்பு முடிந்ததும் குங்குமம் இதழுக்குப் பொறுப்பு ஏற்றார். அச்சிட்டு வினியோகிக்கப்படும் இதழ்களுக்கு மாற்றாக, 'காணொலி இதழ்' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார். இப் பரிசோதனையின் விளைவாகப் பிறந்ததுதான் 'பூமாலை வீடியோ இதழ்'. இந்தப் புதுமை முயற்சி தந்த அனுபவமே செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆரம்பிக்கத் தூண்டியது. 1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனம் உருவானது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் 'உதயா', தெலுங்கில் 'ஜெமினி', மலையாளத்தில் 'சூர்யா', வங்க மொழியில் 'சன் வங்காள' ஆகிய அலைவரிசைகளை உள்ளடக்கிய 'சன் நெட்வொர்க்' என்ற குழுமத்தை நிறுவினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Kalanithi Maran". Forbes. https://www.forbes.com/profile/kalanithi-maran/. பார்த்த நாள்: 21 December 2011. 
  2. தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்127
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாநிதி_மாறன்&oldid=3309642" இலிருந்து மீள்விக்கப்பட்டது