கலோசெதிரசு பார்மோசனா

கலோசெதிரசு பார்மோசனா (Calocedrus formosana) (syn. C. macrolepis var. formosana (Florin) WCCheng & LKFu; Taiwan Incense-cedar ; Chinese 臺灣肖楠 அல்லது臺灣翠柏) என்பது தைவானைச் சார்ந்த ஓர் அருகிய ஊசியிலை மரமாகும் .[2][3]

கலோசெதிரசு பார்மோசனா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. formosana
இருசொற் பெயரீடு
Calocedrus formosana
(Florin) Florin

விளக்கங்கள் தொகு

இது 20-25 மீ உயரம் கொண்ட நடுத்தர அளவிலான மரமாகும். இதில் 3 மீட்டர் விட்டம் கொண்ட தண்டு அமையும். மரப்பட்டை ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் சாம்பல் நிறமாக இருக்கும். முதலில் மென்மையானதாய் இருந்துத், பிளவுபட்டு, பழைய மரங்களின் கீழ் தண்டுகளில் நீண்ட கீற்றுகளாக உரிந்துவிடும். இலைகள் 1.5-8 மிமீ அளவுடன் இலைகளுடன் தட்டையான தெளிப்புகளிலனுருவாகும். அவை எதிரெதிர் டெகசேட் இணைகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன, அடுத்தடுத்த இணைகள் நெருக்கமாகவும் பின்னர் தொலைவான இடைவெளியிலும் அமையும், எனவே நான்கு வெளிப்படையான சுழல்களை உருவாக்குகின்றன; முகப்பு இணைகள் தட்டையானவை, பக்கவாட்டு இணைகள் அவற்றின் தளங்களுக்கு மேல் மடிந்திருக்கும். இலைத் தெளிப்புகளின் மேல் பக்கம் இலைத்துளை இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி வெள்ளை நிற இலைத்துள்ளை அடர்த்தியான திட்டுகளால் அமைகிறது.[2]

விதைக் கூம்புகள் 10-15 மிமீ நீளத்திலும், வெளிர் ஊதா நிறத்திலும் வெண்மை நிற மெழுகு பூச்சுடன், நான்கு (அரிதாக ஆறு) செதில்கள் எதிரெதிர் டெகுசேட் இணைகளாக அமைக்கப்பட்டிருக்கும்; வெளிப்புற செதில் இணைகள் ஒவ்வொன்றும் இரண்டு இறக்கைகள் கொண்ட விதைகளைக் கொண்டிருக்கும், உட்புறஈணை (கள்) பொதுவாக மலட்டுத்தன்மையுடன் இருக்கும்; கூம்புகள் 4-6மிமீ நீளமுள்ள தண்டு சிறிதளவு மூடப்பட்டிருக்கும். இதில் (2 மிமீ) அளவு இலைகள் தாங்கப்படுகின்றன  . மகரந்தச் சேர்க்கைக்குப் பின் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது கூம்புகள் பழுப்பு நிறமாக மாறும். மகரந்த கூம்புகள் 4-5 மிமீ நீளம்.[2] வரை அமையும்.

பல்வேறு இனங்கள் தொகு

இது காலோசெதிரசு மேக்ரோலெபிசு இனத்துக்கு மிகவும் ஒத்திருக்கிறது, மேலும் சில தாவரவியலாளர்கள் அதை சி. மேக்ரோலெபிசு என்ற பார்மோசனா வகையாகக் கருதுகின்றனர். .[3] இவை நீண்ட கூம்பு தண்டு, 10-20 மிமீ நீளத்துடன் சி. மேக்ரோலெபிசு இனத்தில் இருந்து வெளிப்படையாக வேறுபடுகின்றன .[2]

அச்சுறுத்தல்கள் தொகு

இனங்கள் 5,000 கிமீ அளவுக்கும் குறைவான இயலிட வரம்பைக் கொண்டுள்ளன.. மேலும் இதன் மதிப்புமிக்க மரத்திற்காக அதிக அறுவடை நடக்கிறது. மேலும், இது இயற்கை காடுகளை வேகமாக வளரும் அயல்நாட்டு இனங்களின் தோட்டங்களாக மாற்றுவதன் வழி அச்சுறுத்தப்படுகிறது. சில புகலிடப் பகுதிகலில் இவை இப்போது பாதுகாக்கப்படுகின்றன, மேலும் குறைந்த அளவிலான மறு நடவும் நடைபெறுகிறது, ஆனால் ஒட்டுமொத்தச் சரிவு தொடர்கிறது.[2] இது அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க தொகு

  • சிடார் மரம்

மேற்கோள்கள் தொகு

  1. Yang, Y.; Farjon, A.; Liao, W. (2013). "Calocedrus formosana". IUCN Red List of Threatened Species 2013: e.T31254A2802558. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T31254A2802558.en. https://www.iucnredlist.org/species/31254/2802558. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Farjon, A. (2005).
  3. 3.0 3.1 Flora of China: Calocedrus macrolepis var.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோசெதிரசு_பார்மோசனா&oldid=3939740" இலிருந்து மீள்விக்கப்பட்டது