கல்லச்சுப் பொறி

கல்லச்சுப் பொறி (lithograph) என்பது அச்சுத் தொழிலில் பயன்படும் எந்திரமாகும். லித்தோ எனச் சொல்லப்படும் இவ்வகை எந்திரங்கள் மூலம் சுவரொட்டிகளும் பத்திரிக்கைகளும் அச்சிடப்படுகின்றன. கல் அல்லது உலோகத் தகட்டில் படங்களையும் எழுத்துக்களையும் பதித்து அச்சிடுவது லித்தோ முறையாகும். இதில் அச்சிடும் பகுதி மேடு பள்ளமில்லாது சமதளப் பரப்பாகவே இருக்கும் என்றாலும் இரு பகுதிகளுக்கும் வேதியியல் வேறுபாடு உண்டு. அச்சிடும் பகுதிகள் ஈரமாகும் போது நீரை விலக்கி மையை உறிஞ்சும். அச்சிடப்படாத பகுதிகள் நீரை உறிஞ்சி மையை விலக்கும்.

லித்தோ முறையில் அச்சிடும் கருவியின் பக்கத்தோற்றம். மை உருளைகள் மையை உறிஞ்சுதலும் நீரை விலக்குவதும் காட்டப்பட்டுள்ளது.[1]


கல்லச்சு முறையில் அச்சிடப்பட்ட சில படங்கள் தொகு

மேற்கோள் தொகு

<references>

  1. Kipphan, Helmut (2001). Handbook of print media: technologies and production methods (Illustrated ed.). Springer. pp. 130–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3540673261.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லச்சுப்_பொறி&oldid=3047822" இலிருந்து மீள்விக்கப்பட்டது