கழற்சிக்காய்

கழற்சிக்காய் (molucca-beans, Nickernuts) என்பது கழற்சி என்ற ஒரு வகைக் கொடியில் காய்க்கும் ஒரு மூலிகை ஆகும். இதனது ஓடுகள் கடினமானவை. உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும். இது மிகவும் கசப்பானது. இது கச்சூரம், கெச்சக்காய், வஜ்ரபீஜம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.[1][2][3]

கழற்சி காய்களும், விதைகளும்

இலக்கியத்தில் தொகு

இலக்கியத்தில் குறிக்கப்படும் கழங்காடுதல் (தட்டாங்கல்) என்ற விளையாட்டுக்கு இக் கழற்சிக்காய்களே பாவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் (புறம். 36)

மகளிர்.... முத்தவார்மணற்
பொற்கழங் காடும். (பெரும்பாண். 327 – 35)

தென்பொதிகை மலையில் இத்தாவரம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனையும் காண்க தொகு

  • கழற்சி அல்லது வஜ்ஜிரபீஜம், Caesalpinia bonducella

மேற்கோள்கள் தொகு

  1. "The Fabulous Nickernuts". Wayne's Word. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  2. West Word March 2002, retrieved 1 June 2010.
  3. "Gray Nickarbean or Sea Pearl". A Sea-Bean Guide. Archived from the original on 25 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழற்சிக்காய்&oldid=3889901" இலிருந்து மீள்விக்கப்பட்டது