கவண்வில் அல்லது கவட்டை என்பது சிறு பறவைகளை வேட்டையாட உதவும் சிறு வேட்டைக் கருவி. சிறிய மரக்கிளைகளில் ஆங்கில எழுத்தான வி(V) என்பது போல் பிரியும் இருகிளைகளை வெட்டி எடுத்துக் கொள்கின்றனர். இதைக் கையில் பிடிப்பதற்கேற்ற வகையில் செதுக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட நீளத்திற்கு இரண்டு சம அளவு ரப்பர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, ரப்பர் துண்டுகளின் ஒரு முனையை தயாரித்து வைத்திருக்கும் வி வடிவ மரக்குச்சியின் இரு கிளைகளிலும் கட்டிக் கொள்கின்றனர். இரண்டாவது முனையை சிறிய தோல் பகுதியில் இணைக்கின்றனர். இந்தத் தோல் பகுதியில் சிறு கற்கள் அல்லது உருண்டை வடிவப் பொருட்களை வைத்து தூரத்திலிருக்கும் பொருளை நோக்கிக் குறி வைத்துக் கொண்டு ரப்பர் துண்டை இழுத்துக் கொண்டு பின்னர் விடுவிக்கின்றனர். இப்போது தோல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிறு கல் குறி வைக்கப்பட்ட பகுதி நோக்கிச் செல்லும். இதில் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள் குறிவைத்த இடத்தை சரியாகச் செலுத்த முடியும். குருவி, காகம் போன்ற சிறு பறவைகளை வேட்டையாட இந்தக் கவண் வில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த சிறு வேட்டைக் கருவியை நாக்காலே ( நரிக்குறவர் ) இன மக்கள் அதிகம் பயன்படுத்தினர்.

கவண்வில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவண்வில்&oldid=3079454" இலிருந்து மீள்விக்கப்பட்டது