காட்சிக்குட்பட்ட பேரண்டம்

அண்டவியல் பெருவெடிப்பு கோட்பாட்டில், காட்சிக்குட்பட்ட பேரண்டம் (Observable universe) என்பது மனிதர்கள் பூமியில் இருந்து இன்று காணக்கூடிய விண்மீன் பேரடைகளையும், அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். அண்டத்தின் தொடக்கத்தில் இருந்து இப்பொழுது வரை ஒளி எவ்வளவு தொலைவு வந்திருக்க முடியுமோ அவ்வளவு நீளத்திற்கு நம்மைச் சுற்றியுள்ளவற்றை நம்மால் காண முடியும். இதுவே காட்சிக்குட்பட்ட அண்டமாகும்.

காட்சிக்குட்பட்ட பேரண்டம்
Visualization of the whole observable universe. The scale is such that the fine grains represent collections of large numbers of superclusters. The கன்னி விண்மீன் மீகொத்து – home of Milky Way – is marked at the center, but is too small to be seen.
Diameter8.8×1026 m (28.5 Gpc or 93 Gly)[1]
Volume4×1080 m3[2]
Mass (ordinary matter)1053 kg[3]
Density9.9×10−30 g/cm3 (equivalent to 6 நேர்மின்னிs per cubic meter of space)[4]
Age13.799±0.021 billion years[5]
Average temperature2.72548 K[6]
ContentsOrdinary (baryonic) பொருள் (4.9%)
கரும்பொருள் (வானியல்) (26.8%)
கருப்பு ஆற்றல் (68.3%)

பொதுவாக பேரண்டம் பின் வரும் 4 பகுதிகளையும் அவை சார்ந்த பொருட்களையும் அடக்கியது: காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி.

கரும் பொருட்களும் ஆற்றலும் தொகு

 
அண்டத்தில் கரும்பொருள் பங்கு

அண்டத்திலுள்ள கண்ணுக்குத் தெரியாத எல்லாப் பொருட்களும், கரும்பொருட்கள் (dark matter) என்று சொல்லப்படுகின்றன. இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாகச் சுழலும் விண்மீன்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது எனவும் நம்புகிறார்கள்.[7] அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது.[8][9]

ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி தொகு

பொதுவாக மானிடர் கண்களை கொண்டு ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால் அப்பொருளின் மீது ஒளி பட்டு அவ்வொளி மீண்டும் அம்மானிடர் கண்களை வந்தடைய வேண்டும். அதைப் போல் இவ்வண்டத்தில் மானிடர் கண்களுக்கும், மானிடர் அனுப்பிய செயற்கை விண்ணுளவி தொலைநோக்கிகளுக்கும் ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி எனப்படும்.

எடுத்துக்காட்டாக, அண்டத்தின் எல்லையை பால் வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். அவ்வாறு மானிடர் கண்களுக்கு ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையை தாண்டியுள்ள பகுதி எனப்படும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும்.

 
மடக்கையளவுத் திட்டத்தில் ஓவியரின் கைவண்ணத்தில் காட்சிக்குட்பட்ட பேரண்டம் (நடுவில் சூரியக் குடும்பம், உட்புற மற்றும் வெளி கோள், கைப்பர் பட்டை, ஊர்ட் மேகம், ஆல்ஃபா செண்ட்டாரி, பேர்சியசு ஆர்ம், பால் வழி, அந்திரொமேடா பேரடை, கிட்டவுள்ள விண்மீன் பேரடைகள், காட்சிக்குட்பட்ட பேரண்டம், அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சு, மற்றும் ஓரத்தில் பெரு வெடிப்பின் கண்ணுக்குத்தெரியாத பிளாசுமா.

காட்சிக்குட்பட்ட பேரண்டம் தொகு

இக்காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்த கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். அதாவது 2,800 கோடி புடைநொடிகள் விட்டம் கொண்டது. இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள் (4.1 × 1032 கனசதுர ஒளியாண்டுகள்) ஆகும்.

எடை

ஒரு சராசரி விண்மீனின் எடை 2×1030 கிலோகிராம் ஆகும். ஒரு விண்மீனின் பேரடையில் 40,000 கோடி (4×1011) விண்மீன்கள் இருக்கும். காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் 8,000 கோடி(8×1010) விண்மீன் பேரடைகள் இருக்கலாம். அதாவது இக்காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 2×1030×4×1011×8×1010= 64×1051 கிலோகிராம்கள் ஆகும். அதாவது 3×1079 நீரியம் அணுக்கள் ஆகும்.[10]

மேற்கோள் தொகு

  1. Itzhak Bars; John Terning (November 2009). Extra Dimensions in Space and Time. Springer. பக். 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-77637-8. https://books.google.com/books?id=fFSMatekilIC&pg=PA27. பார்த்த நாள்: 2011-05-01. 
  2. What is the Universe Made Of?
  3. Paul Davies (2006). The Goldilocks Enigma. First Mariner Books. பக். 43–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-618-59226-5. http://www.amazon.com/Goldilocks-Enigma-Universe-Just-Right/dp/0547053584/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1372701918&sr=1-1&keywords=goldilocks+enigma. பார்த்த நாள்: 1 July 2013. 
  4. http://map.gsfc.nasa.gov/universe/uni_matter.html January 13, 2015
  5. Planck Collaboration (2015). Planck 2015 results. XIII. Cosmological parameters (See Table 4 on page 31 of pfd).. Bibcode: 2015arXiv150201589P. 
  6. Fixsen, D. J. (December 2009). "The Temperature of the Cosmic Microwave Background". The Astrophysical Journal 707 (2): 916–920. doi:10.1088/0004-637X/707/2/916. Bibcode: 2009ApJ...707..916F. 
  7. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம் பக்கம் - 63, கரும்பொருட்கள், ISBN 978-8189936228
  8. Hinshaw, Gary F. (January 29, 2010). "What is the universe made of?". Universe 101. NASA website. பார்க்கப்பட்ட நாள் 2010-03-17.
  9. "Seven-Year Wilson Microwave Anisotropy Probe (WMAP) Observations: Sky Maps, Systematic Errors, and Basic Results" (PDF). நாசா. Archived from the original (PDF) on 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02. (see p. 39 for a table of best estimates for various cosmological parameters)
  10. Matthew Champion, "Re: How many atoms make up the universe?", 1998