காதல் கதை

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் கதை (Kadhal Kadhai) மேலும் இது வேலு பிரபாகரனின் காதல் கதை என்றும் அழைக்கப்படுகிறது இது 2009 ஆண்டு வெளியான இந்திய தமிழ் சிற்றின்ப காதல் நாடகத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் எழுதி இயக்கிய இப்படத்தில் வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ், பிரீத்தி ரங்காயணி, பாபிலோனா, ஸ்டெஃபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் ஜெய் ராத்தன், அதிரூபன், சம்பத் ராம், ஸ்ரீலேகா, சாட்சி சிவா, சுருளி மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜே. சதீஷ்குமார் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்திய தணிக்கை வாரியத்துடன் பல வருட போராட்டத்திற்குப் பிறகு, படம் வயது வந்தோர் பார்க்கத்தகது என்ற பிரிவில் 17 சூலை 2009 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் மன்மதுலு என்றும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2] 2017 இல் வேலு பிரபாகரன் ஷெர்லி தாஸை மணந்தார்.[3]

காதல் கதை
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஜெ. சத்திஷ் குமார்
கதைவேலு பிரபாகரன்
இசைஇளையராஜா
நடிப்பு
  • வேலு பிரபாகரன்
  • ஷெர்லி தாஸ்
  • பிரீத்தி ரங்காயணி
  • பாபிலோனா
  • ஸ்டெஃபி
ஒளிப்பதிவுவேலு செல்வம்
படத்தொகுப்புபி. கீர்த்தி மோகன்
கலையகம்ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 17, 2009 (2009-07-17)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் நிர்வாண காட்சிகள் அடங்கிய ஒரு சர்ச்சைக்குரிய படத்தை இயக்குகிறார். அப்படத்தை தணிக்கை வாரியம் வெளியிட தடை விதிக்கிறது. இதனால், வேலு பிரபாகரன் படத்தை வெளியிடுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஒரு நாள், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு வெளிவரும் வேலு பிரபாகரனை குண்டர்கள் தாக்குகிறார்கள். இதனால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். கொலை முயற்சி குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர். அண்மையில் வேலு பிரபாகரனை நேர்காணல் கண்ட பெண் பத்திரிகையாளரிடம் (ஸ்டெஃபி) காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு, விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராணி (ஷெர்லி தாஸ்), தங்கம் (பிரீத்தி ரங்காயணி), சரோஜா (பாபிலோனா) ஆகிய மூன்று பெண்களைப் பற்றிய தனது படத்தின் கதையை வேலு பிரபாகரன் அவளிடம் சொன்னார். அந்த மூன்று பெண்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சினை உள்ளது. அது காமம் ஆகும்.

உயர் சாதி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் சாதிக் கலவரங்களால் விஷ்ணுபுரம் பாதிக்கப்படுகிறது. ஒரு கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட பெண்ணான ராணியை சக்தி (ஜெய் ராதன்) என்ற உயர் சாதி இளைஞன் காப்பாற்றுகிறான். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் காதல்வயப்படுகின்றனர். சக்தி இதயமற்ற சாதித் தலைவரான ரெட்டியாரின் மகன், ராணி மிருகத்தனமான கருப்பையாவின் ( சம்பத் ராம் ) அக்காள் மகள். ரெட்டியாரும் கருப்பையாவும் பகை கொண்டவர்கள். திருமணமாகாத ஒரு பள்ளி ஆசிரியரிடம் (ஆதிரூபன்) வாழ்க்கையில் வழுக்கி விழுந்த தங்கம் வீட்டுவேலை செய்கிறாள். தங்கத்தை கர்ப்பமாக்கி அவளுடைய காதலன் அவளை கைவிட்டுவிடுகிறான். கைப்பிள்ளையுடன் உள்ள தங்கத்தை அவளது அண்ணன் பழனியும், அண்ணி சரோஜாவும் வீட்டைவிட்டு வெளியேற்றுவிடுகின்றனர். இதன் பிறகே அவள் ஆசிரியரிடம் வீட்டு வேலைக்கு வருகிறாள். ஒரு நாள், ஆசிரியர் தங்கத்திற்கு தூக்க மாத்திரை கலந்த பால் கொடுத்து, தூக்க கலக்கத்தில் உள்ள அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறார். பின்னர் ஆசிரியர் தங்கத்தை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார். ஆனால் பின்னர் ஆசிரியரது குடும்பத்தினர் அவரது சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இரண்டாவது முறையாக ஒரு ஆணால் ஏமாற்றபட்டதை உணர்ந்த தங்கம் அந்த ஆசிரியரின் முகத்தில் துப்புகிறாள் அவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். பணத்திற்காக எதையும் செய்யும் சரோஜா, ரெட்டியருடன் கள்ள உறவு வைத்திருக்கிறாள். ஒரு நாள், பழனி சரோஜா ரெட்டியருடன் படுத்திருப்பதைக் கண்டுபிடிக்கிறான். இதன் பிறகு ரெட்டியார் அவனைக் கொடூரமாகக் கொன்றார்.

கதையைச் சொன்ன, வேலு பிரபாகரன் பத்திரிகையாளரிடம் தனது காதல் வாழ்க்கையையும் இந்த படத்தை இயக்கத் தூண்டிய காரணத்தையும் தற்போது வரை, குறிப்பிடுகிறார். காவல்துறையினர் வேலுபிரபாகரனை கொல்ல முயன்ற குற்றவாளியை கைது செய்கிறார்கள். இந்த கொலை முயற்சிக்கு காரணம் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவி ஆவாள். அவள் தனது முந்தைய திருமணத்தை தனது புதிய கணவரிடமிருந்து மறைக்க விரும்பி, அதற்காக அவரைக் கொல்ல குண்டர்களை அனுப்பினாள்.

சில மாதங்களுக்குப் பிறகு, குணமடைந்து திரும்பும் வேலு பிரபாகரன், பத்திரிகையாளரைச் சந்தித்து, தனது படத்தின் இறுதிக்கட்டத்தை அவரிடம் சொல்கிறார். இளம் காதலர்கள் தப்பி ஓட முடிவு செய்கின்றனர். ஆனால் ரெட்டியார் இளம் காதலர்களைப் பிடித்துவந்து ராணியை தலையை துண்டிக்கிறார். இதனால் அவரது மகன் சக்தி அவரை கொல்கிறான். இக்கதையைக் கேட்ட பின்னர் பத்திரிகையாளர் தனது காதலை வேலு பிரபாகரனிடம் தெரிவிக்கிறார். தான் காதலை நம்பவில்லை என்று அவரிடம் சொல்கிறார், ஆனால் அவர் காமத்தை நம்புகிறார்.

நடிகர்கள் தொகு

  • வேலு பிரபாகரன் அவராகவே
  • ஷெர்லி தாஸ் ராணியாக
  • பிரீத்தி ரங்காயணி தங்கமாக
  • பாபிலோனா சரோஜாவாக
  • ஸ்டெபி பத்திரிக்கையாளராக
  • ஜெய் ரத்தன் சக்தியாக
  • சம்பத் ராம் கருப்பையாவாக
  • அதிரூபன் ஆசிரியராக
  • சிறீலேகா ராணியின் தாயாக
  • சாக்சி சிவா காவல் ஆய்வாளராக
  • சுருளி மனோகர்
  • சுந்தர்
  • பூச்சி செந்தில்
  • ஆவடி மனோகரன்
  • அன்பு தென்னரசு

தயாரிப்பு தொகு

வேலு பிரபாகரன் 2003 அக்டோபரில் கதல் அரங்கம் என்ற திரைப்படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார், இந்தத் படத்திற்கான கதை, திரைக்கதை, உரையாடலை எழுதினார்.[4][5] இந்த படம் சமூகத்தில் காமம் குறித்து நிலவும் பொய்யை அம்பலப்படுத்தும் என்று வேலு பிரபாகரன் குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அவர் படத்தின் இயக்குனர் பெயராக தனது சகோதரர் வேலு ராஜாவை குறிப்பிட்டார். இப்படம் நடைமுறையில் உள்ள சாதி முறையையும், பாலுணர்வையும் ஆராய்கிறது. ஆகவே, வெட்ட வேண்டிய காட்சிகள் காரணமாக படத்திற்கு சான்றிதழை வழங்க தணிக்கை வாரியம் தயாராக இல்லை. 2004 திசம்பரில் தணிக்கை வாரியத்துடன் போராட்டம் தோன்றியது.[6] 2006 நவம்பரில், வேலு பிரபாகரன் செய்தியாளர் கூட்டத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்தார், "அடக்குமுறைதான் நிறைய பாலியல் குற்றங்களுக்கு காரணமாகிறது. மேற்கத்திய நாடுகளில் இவ்வாறு இல்லை, அதனால்தான் அவர்கள் உடலைக் காண்பிப்பதை பெரிய விஷயமாக கருதுவதில்லை. இங்கே, ஒரு அரைகுறை தாவணியானது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது ".[7] 2009 ஆண்டில் தணிக்கைக் குழு இறுதியாக சில காட்சிகளை வெட்டியும், சில உரையாடல்களை மௌணித்தும் தணிக்கை சான்றை அளிக்க ஒத்துக் கொண்டாலும், அது காதல் அரங்கம் என்ற பெயரை காதல் கதை என்று மாற்றியது.[8][9] இயக்குனர் தனது வாழ்க்கைக் கதையிலில் சில கூறுகளை படத்தில் செருகியதால், படத்தின் பெயரை வேலு பிரபாகரனின் காதல் கதை என்றும் குறிப்பிட்டார். படத்தில் அவரது கருத்துக்களையும் படம் வெளியான விதத்தின் சிரமங்களையும் விவரிக்கபட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் ஒரு திரைப்பட இயக்குனரின் பாத்திரத்தில் நடித்தார், படத்தின் கூறுகளில் தன் சுயசரிதை உள்ளது என்று குறிப்பிட்டார்.[10][11]

இசை தொகு

திரைப்பட பினண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இளையராஜா அமைத்தார். 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், முத்துலிங்கம், மு. மேத்தா எழுதிய இரண்டு பாடல்கள் உள்ளன.[12]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மலரே மலரே"  இளையராஜா 4:34
2. "கடுகுலே நடக்கிறதே"  கார்த்திக், குழுவினர் 4:45
மொத்த நீளம்:
9:19

வெளியீடு தொகு

இந்த படம் 2009 சூலை 17 அன்று அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வெடிகுண்டு முருகேசன் ஆகிய படங்களுடன் வெளியானது.[13]

குறிப்புகள் தொகு

  1. "Find Tamil Movie Kadhal Kathai". jointscene.com. Archived from the original on 11 September 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  2. "Manmadhulu to hit screen on Dec 4". filmibeat.com. 26 November 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  3. "Velu Prabhakaran ties the knot with Shirley Das, his heroine from Kadhal Kadhai". Asianet News Network Pvt Ltd.
  4. "28-10". Archived from the original on 25 October 2004.
  5. "Making a mark". தி இந்து. 24 May 2004. Archived from the original on 30 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Velu Prabhakaran's clash with censors". indiaglitz.com. 8 December 2004. Archived from the original on 17 December 2012. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  7. "Kaadhal Arangam blocked by censors". filmibeat.com. 27 November 2006. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  8. "Velu Prabhakar's bold film gets censor nod!". சிஃபி. 24 June 2009. Archived from the original on 19 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. "Kadhal Arangam is Kadhal Kadhai now". indiaglitz.com. 22 June 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  10. "Kadhal Kadhai - Behindwoods.com - Tamil Movie Previews". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  11. "Grill Mill". The Hindu. 26 June 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  12. "Kadhal Kadhai (2009) - Ilaiyaraaja". mio.to. Archived from the original on 24 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Kollywood is not bothered about Aadi!". Sify. 12 July 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கதை&oldid=3741978" இலிருந்து மீள்விக்கப்பட்டது