காதிங்லஜ் தாலுகா

காதிங்லஜ் தாலுகா (Gadhinglaj Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கில் அமைந்த கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் காதிங்லஜ் நகரம் ஆகும். இந்த வருவாய் வட்டம் 92 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[1]

காதிங்லஜ் தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் காதிங்லஜ் தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் காதிங்லஜ் தாலுகாவின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
வருவாய் கோட்டம்புனே
மாவட்டம்கோலாப்பூர்
தலைமையிடம்காதிங்லஜ்
அரசு
 • மக்களவைத் தொகுதிகள்கோலாப்பூர் மக்களவைத் தொகுதி
பரப்பளவு
 • வருவாய் வட்டம்472.38 km2 (182.39 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • வருவாய் வட்டம்2,25,734
 • அடர்த்தி480/km2 (1,200/sq mi)
 • நகர்ப்புறம்
40%
மக்கள் தொகை பரம்பல்
 • எழுத்தறிவு68.89%
 • பாலின விகிதம்1039
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
சாலைப்போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை எண் 4

இது மகாராட்டிரா-கர்நாடகா மாநில எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டில் இவ்வட்டத்தின் மக்கள் தொகை 2,25,734 ஆகும். மக்களில் 40% பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். இவ்வட்ட மக்களில் பேச்சு மொழி மராத்திய மொழி ஆகும். இவ்வட்டம் கர்நாடகா மாநிலத்தின் எல்லைப்புறத்தில் இருப்பதால் கன்னடம் பேசப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 472.38 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 52,872 குடியிருப்புகளும் கொண்ட காதிங்லஜ் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,25,734 ஆகும். அதில் ஆண்கள் 110727 மற்றும் பெண்கள் 115007 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 22764 (10.08% ) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1039 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.89% ஆகும். இதன் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 478 பேர் வீதம் உள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10% மற்றும் 0.72% ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 92.88%, இசுலாமியர்கள் 5.34%, சமணர்கள் 1.08%, கிறித்துவர்கள் 0.26% மற்றவர்கள் 0.44% ஆக உள்ளனர்.[2]

காதிங்லஜ் தாலுகாவின் ஊர்களும் நகரங்களும் தொகு

Rank நகரம் 2011-இல் மக்கள் தொகை
1 காதிங்லஜ் 79,997
2 காட்கோன் 20,851
3 நெசரி 20,249
4 மகாகோன் 20,108
5 ஹரலி 15,856
6 முக்குருவாடி 12,199
7 ஹல்கர்ணி 9,000
8 கௌலாஜ் 5,199
9 கரம்பலி 7,199
10 கிஜாவானே 7,236

புவியியல் தொகு

16°14′N 74°21′E / 16.23°N 74.35°E / 16.23; 74.35 பாகையில் அமைந்த காதிங்லஜ் தாலுகா, கடல்மட்டத்திலிருந்து 623 மீட்டர் (2043 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது மகராட்டிரா மற்றும் கர்நாடகா மாநில எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதிங்லஜ்_தாலுகா&oldid=3369859" இலிருந்து மீள்விக்கப்பட்டது