காத்திருந்த கண்கள்

தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காத்திருந்த கண்கள் (Kathiruntha Kangal) 1962ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கா ராவ், வி. எஸ். ராகவன், பண்டரி பாய் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இதை தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கில் ஆஷா ஜோதி என்ற பெயரில் வெளியானது. எம். எஸ். சோலைமலை கதை எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.[1]

காத்திருந்த கண்கள்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புடி. கே. ராமசாமி
வாசுமதி பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வி. எஸ். ராகவன்
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
வெளியீடுஆகத்து 29, 1962
ஓட்டம்.
நீளம்4004 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • இரட்டை சகோதரிகள் - சாவித்திரி
  • மருத்துவர் - ஜெமினி கணேசன்
  • இரட்டை சகோதரிகளின் தாய் - லட்சுமி
  • செல்வந்தர் - ரங்கா ராவ்

திரைக்கதை தொகு

பிறந்த உடனேயே வறுமையின் காரணமாக சகோதரிகள் இருவரும் பிரிய நேர்கிறது. ஒரு பெண்ணை வறுமையில் வாடும் தாயும் இன்னொருத்தியை செல்வந்தரும் வளர்க்கின்றனர். மருத்துவர் அந்த நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருத்துவம் செய்கிறார். அவர் மீது காதல் கொள்கிறாள் தாயுடன் வளர்க்கப்பட்ட பெண். இதை அவர் அறிந்திருக்கவில்லை. இறக்கும் தறுவாயில், தன் மகளிடம் அவள் இரட்டையரில் ஒருத்தி என்ற உண்மையை சொல்கிறாள் தாய். தன் சகோதரியைத் தேடிச் செல்கிறாள் அந்தப் பெண். அதிர்ஷ்டவசமாக, சகோதரிகள் இருவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள். ரயில் விபத்தில் செல்வந்தருடன் வளர்ந்த மகள் நினைவிழக்கிறாள். அவள் இறந்து விட்டதாக அனைவரும் நம்புகின்றனர். அவள் பயணித்த ரயிலில் சென்ற தாயுடன் வளர்க்கப்பட்ட பெண்ணையே பணக்காரப் பெண் என்று நினைத்து மணக்கிறார் மருத்துவர். இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. பணக்கார சகோதரி திரும்புகிறாள். சிக்கல்கள் எப்படித் தீர்ந்தன என்பது மீதிக்கதை.

பாடல்கள் தொகு

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் பாடகர்கள்
ஓடம் நதியினிலே சீர்காழி கோவிந்தராஜன்
காற்று வந்தால் தலையாட்டும் நாணல் பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்திருந்த_கண்கள்&oldid=3806529" இலிருந்து மீள்விக்கப்பட்டது