காப்ராவின் பிரமிடு

காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre)[2] (அரபு மொழி: هرم خفرع‎, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார்.[5] இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது.

மன்னர் காப்ராவின் பிரமிடு
மன்னர் காபராவின் பிரமிடு
மன்னர் காப்ராவின் பிரமிடு, கீசா
ஆள்கூறுகள்29°58′34″N 31°07′51″E / 29.97611°N 31.13083°E / 29.97611; 31.13083
பழங்காலப் பெயர்
<
N5N28I9
>G36O24
[1]
Wr Ḫa-f-re
Wer Khafre
Great is Khafre
வகைTrue pyramid
உயரம்136.4 மீட்டர்கள் (448 அடி)[2]
143.5 m or 471 அடி or 274 cu[2] (original)
அடி215.25 மீட்டர்கள் (706 அடி; 411 cu)[3]
கனவளவு2,211,096 கன சதுர மீட்டர்கள் (78,084,118 cu ft)[4]
சரிவு53°10'[3][4]
மன்னர் காப்ரா கட்டிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 அடி) உயரமும் கொண்டது.[2]. இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது.

எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.

காப்ராவின் பிரமிடின் உட்புறக் காட்சி மற்றும் செல்லும் வழி
மன்னர் காப்ராவின் கல்லறைக் கோயிலின் 16 தூண்கள் கொண்ட மண்டபம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Verner 2001d, ப. 223.
  2. 2.0 2.1 2.2 2.3 "Pyramid of Chefren, Giza - SkyscraperPage.com". Skyscraper Source Media Inc. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
  3. 3.0 3.1 Verner 2001d, ப. 463.
  4. 4.0 4.1 Lehner 2008, ப. 17.
  5. Shaw, Ian, "The Oxford History of Ancient Egypt", 2000 p.90

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pyramid of Khafra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்ராவின்_பிரமிடு&oldid=3613108" இலிருந்து மீள்விக்கப்பட்டது