காலம் மாறிப்போச்சு (1996 திரைப்படம்)

வி. சேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காலம் மாறிப் போச்சு 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

காலம் மாறிப் போச்சு
இயக்கம்வி.சேகர்
தயாரிப்புசெ.கண்ணப்பன்(ஏ.வி.எம்)
எஸ்.ஜெயலக்ஷ்மி
எஸ்.தமிழ்செல்வி
எஸ்.எஸ்.துரை ராஜு
கதைவி.சேகர்
இசைதேவா
நடிப்புபாண்டியராஜன்
சங்கீதா
வெண்ணிற ஆடை மூர்த்தி
வடிவேலு
கோவை சரளா
ஆர்.சுந்தர்ராஜன்
ரேகா
வடிவுக்கரசி
வினு சக்கரவர்த்தி
விஜயசந்திரிகா
ராஜ்சுந்தர்
நீரஜா
தமிழ்செல்வி
ஒளிப்பதிவுஜி.ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ.பி.மணிவண்ணன்
வெளியீடுஏப்ரல் 11, 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நான்கு பெண்கள் பெற்ற தகப்பனார் அம்மூன்று பெண்களையும் சுமையாகவும் செலவாகவும் கருதுகிறார். தான் பெற்ற ஒரே மகன்தான் தனது ஆஸ்திக்குரிய ஒரே வாரிசு என்று வாழ்கிறார். தனது பெண்களுக்கு விருப்பமில்லாத மணமகன்களை அவர்களுக்கு மணமுடித்து வைக்கிறார். துளி கூட தனது விருப்பத்திற்கு மதிப்பில்லாமல் தந்தை மணமுடித்த விரக்தியில் புகுந்த வீடு செல்கின்றனர் அப்பெண்கள். சொந்த தொழில் செய்வதற்காக மாமனாரிடம் கடன் பெற்று வர அப்பெண்களை கட்டாயப் படுத்துகிறார்கள் அவர்களின் கணவன்மார். தந்தையோ திருமணத்தோடு தனது பொறுப்பு முடிந்தது என்று மகன் பெயரில் தனது சொத்துகளை எழுதி வைக்கிறார். வசதியான வீட்டுப் பெண்ணைத் தேடி மணமுடித்தும் வைக்கிறார். அவனோ தனது தங்கையின் திருமணத்துக்குக் கூட பணம் தர மறுத்து தந்தையை வீட்டை விட்டே துரத்துகிறான். நடுத்தெருவில் நிற்கும் மாமனாரின் கௌரவத்தைக் காக்க திருமணம் நடத்தித்தர உதவுகிறார்கள் பெண்களும் அவரின் மாப்பிள்ளைகளும். பெண் குழந்தை ஆண் குழந்தை என்று பேதம் பாராட்டிய தந்தை மனம் மாறுகிறார். ஆணும் பெண்ணும் சமம், இரு குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று பெற்றோருக்குச் செய்தி சொல்லும் திரைச்சித்திரம் இது.