கால்சியம் சயனமைடு

கால்சியம் சயனமைடு (Calcium cyanamide) என்பது CaCN2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் வழிப்பொருளான சயனமைடு (CN22-) ஒரு உரமாகப் பயன்படுகிறது[3]. இச்சேர்மம் 1898 ஆம் ஆண்டு முதன்முதலில் அடோல்பு பிராங்க் மற்றும் நிக்கோடெம் கரோ ஆகியோரால் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. இச்செயல்முறை பிராங்க் – கரோ செயல்முறை என்று அழைக்கப்படுகிறது[4]. கால்சியம் சயனமைடு வர்த்தகத் துறையில் நைட்ரோலைம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கால்சியம் சயனமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சயனமைடு
வேறு பெயர்கள்
சயன்மைடு கால்சியம் உப்பு, சுண்ணாம்பு நைட்ரசன், யூ.என் 1403, நைட்ரோலைம்
இனங்காட்டிகள்
156-62-7 Y
ChemSpider 10669887 Y
21106503 N
EC number 205-861-8
InChI
  • InChI=1S/CN2.Ca/c2-1-3;/q-2;+2 N
    Key: MYFXBBAEXORJNB-UHFFFAOYSA-N N
  • InChI=1/CN2.Ca/c2-1-3;/q-2;+2
    Key: MYFXBBAEXORJNB-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 4685067
வே.ந.வி.ப எண் GS6000000
SMILES
  • [Ca+2].N#CN
  • [Ca+2].[N-2]C#N
UNII ZLR270912W Y
UN number 1403
பண்புகள்
CaCN2
வாய்ப்பாட்டு எடை 80.102 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம் (மாசுநிலையில்,பெரும்பாலும் சாம்பல் அல்லது கருப்பு நிறம்)
மணம் மணமற்றது
அடர்த்தி 2.29 கி/செ.மீ3
உருகுநிலை 1,340 °C (2,440 °F; 1,610 K)[1]
கொதிநிலை 1150 முதல் 1200 செ (நேரடியாக ஆவியாகும்)
வினைபுரியும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1639
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
எரிச்சலை உண்டாக்கும் (Xi)
S-சொற்றொடர்கள் (S2) S22 S26 S36/37/39
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

கால்சியம் கார்பைடில் இருந்து கால்சியம் சயனமைடு தயாரிக்கப்படுகிறது. கார்பைடு தூளை மின்னுலையில் இட்டு பலமணி நேரம் நைட்ரசன் வாயுவைச் செலுத்தியபடி[5] சுமார் 1000 பாகை செ வெப்பநிலைக்கு சூடாக்கினால் கால்சியம் சயனமைடு கிடைக்கிறது. விளைபொருளை சூழல் வெப்பநிலைக்கு குளிரவைத்து வினையில் ஈடுபடாமல் எஞ்சியிருக்கும் கார்பைடு தண்ணீர் மூலமாக எச்சரிக்கையுடன் வெளியேற்றப்படுகிறது.

CaC2 + N2 → CaCN2 + C (ΔHƒ°= –69.0 kcal/mol at 25 °C)

இவ்வினை பெரிய எஃகு கொள்கலன்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின்னேற்றம் பெற்ற கார்பன் வினைப்படுபொருள்களை சிவக்கும் அளவிற்கு சூடாக்குகிறது. வளிமண்டல அழுத்தம் 2 என்ற அளவில் நைட்ரசன் வாயு உட்செலுத்தப்படுகிறது.

R3m இடக்குழு மற்றும் a = 3.67, c = 14.85 (.10−1 nm) என்ற சட்டகமாறிலி மதிப்புகளுடன் கால்சியம் சயனமைடு அறுங்கோண வடிவத்தில் படிகமாகிறது.[6][7]

பயன்கள் தொகு

 

விவசாயத்தில் உரமாகப் பயன்படுவதுதான் கால்சியம் சயனமைடின் முக்கியமான பயனாகும்.[3]. இது நீருடன் சேர்ந்து சிதைவடைந்து அமோனியாவை வெளியேற்றுகிறது

CaCN2 + 3 H2O → 2 NH3 + CaCO3

சோடியம் கார்பனேட்டுடன் இணைத்து சோடியம் சயனைடு தயாரிக்கவும் கால்சியம் சயனமைடு உதவுகிறது.

CaCN2 + Na2CO3 + 2C → 2 NaCN + CaO + 2CO

தங்கச் சுரங்கத்தில் சயனைடு செயல்முறையில் இச்சோடியம் சயனைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கால்சியம் சயனைடு மற்றும் மெலாமைன் முதலியனவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

கால்சியம் சயனமைடை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தினால் சயனமைடு உருவாகிறது.

CaCN2 + H2O + CO2 → CaCO3 + H2NCN

இவ்வேதி மாற்றம் பெரும்பாலும் நீர்மக் குழம்பு நிலையிலேயே நிகழ்த்தப்படுகிறது. ஆதலால் வர்த்தகத்திலும் இது நீர்த்த கரைசலாகவே விற்பனை செய்யப்படுகிறது.

கார்பன் டை ஆக்சைடு முன்னிலையில் [5]. கால்சியம் சயனமைடுடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினை புரிய வைப்பதால் தையோ யூரியா தயாரிக்கலாம்.

எஃகு தயாரிப்பின் போது எஃகுடன் நைட்ரசனைச் சேர்த்து உலோகக் கலவை தயாரிக்கும் வினையிலும் கால்சியம் சயனமைடு உதவுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8
  2. 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0091". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 Auchmoody, L.R.; Wendel, G.W. (1973). "Effect of calcium cyanamide on growth and nutrition of plan fed yellow-poplar seedlings". U.S. Department of Agriculture, Forest Service. Archived from the original on 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2008-07-18.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "History of Degussa: Rich harvest, healthy environment". பார்க்கப்பட்ட நாள் 2008-07-18.
  5. 5.0 5.1 Thomas Güthner (2006). "Cyanamides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. 
  6. F. Brezina, J. Mollin, R. Pastorek, Z. Sindelar. Chemicke tabulky anorganickych sloucenin (Chemical tables of inorganic compounds). SNTL, 1986.
  7. Vannerberg, N.G. "The crystal structure of calcium cyanamide" Acta Chemica Scandinavica (1-27,1973-42,1988) (1962) 16, p2263-p2266

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_சயனமைடு&oldid=3704764" இலிருந்து மீள்விக்கப்பட்டது