காவ்யா கீரன்

காவ்யா கீரன் (Kavya Keeran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகையும் வடிவழகு மாதிரியும் ஆவார். 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பெரும்பாலும் ஒடியா மற்றும் இந்தி படங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு முதலாவதாக தயாரிக்கப்பட்ட ஒடிய முப்பரிமான திரைப்படமான கவுன்ரி கன்யா மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஓடிய திரைப்படத்துறையில் காவ்யா தொடங்கினார்.[1] 2015 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்துறையில் ரங்-இ-இசுக் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[2][3] 2019 ஆம் ஆண்டில் ஒடியா திரைப்படமான குசி திரைப்படத்திற்காக ஒடிசா மாநில திரைப்பட விருதினைப் பெற்றார்.[4]

காவ்யா கீரன்
Kavya Keeran
பிறப்பு7 அக்டோபர் 1994 (1994-10-07) (அகவை 29)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013 – முதல்
உயரம்5'6
விருதுகள்ஒடிசா மாநில திரைப்பட விருதுகள், 2019

திரைப்படவியல் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி பாத்திரம் குறிப்பு
2013 கவுன்ரி கன்யா ஒடியா அனுசுயா அறிமுகம்
2015 ரங்-இ-இசுக் இந்தி அரீமுகம் பாலிவுட்
2017 இராம் இரத்தன் இந்தி சுவீட்டி
2018 Rahasya ஒடியா இந்துமதி/சுருதி இரட்டை வேடம்
2019 குசி சிறந்த நடிகை, ஒடிசா மாநிலத் திரைப்படத்துறை
2021 சாகித் இரகு சர்தார். இரகு சர்தாரின் மனைவி
போகா ஏமா

மேற்கோள்கள் தொகு

  1. "First Odia 3D Movie of Odisha Kaunri Kanya 3D releases today". Odisha Haalchaal. Archived from the original on 26 திசம்பர் 2013.
  2. "Kavya Kiran: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
  3. "Kavya Keeran's got her hands full". Orissa Post. 7 December 2021. http://odishapostepaper.com/viewmap/149781.jpg. 
  4. "31st Odisha State Film awards and 8th State Tele awards announced: Check details here". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவ்யா_கீரன்&oldid=3397901" இலிருந்து மீள்விக்கப்பட்டது