கிட்டுவாரி


கிட்டுவாரி அல்லது கத்துவாரி என்பது இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள கிட்டுவார்  பள்ளத்தாக்கில் பேசப்படும் காசுமீரமொழியின் மிகவும் தனித்துவமானதும்  பழமைமரபான பேச்சுவழக்கு  உடையதுமான ஒரு மொழி ஆகும் சியார்ச்சு ஆபிரகாம் கிரியர்சன் போன்ற அறிஞர்களால் கிட்டவாரி மொழி காசுமீர மொழியின்  பேச்சுவழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது காசுமீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே பேசப்படும் இரண்டு முக்கிய காசுமீர பேச்சுவழக்குகளில் ஒன்றாகும் (மற்றொன்று பொகுலி, ஒருவேளை இது ஒரு மேற்கு பகாரி மொழியாக இருக்கலாம்).. [4]

கிட்டுவாரி
கத்துவாரி
کِشْتَواڑِی
நாடு(கள்)சம்மு-காசுமீர்
இனம்Kishtwari
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
39,748[1][2]  (2011 census)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புkish1245[3]

கிரியர்சன், தனது மொழியியல் கணக்கெடுப்பில், கிட்டுவாரியைக் காசுமீரிய மொழியின் வேறுபட்ட ஒரு வகையான மொழியாக வகைப்படுத்தினார், இது அண்டைப் பகுதி மொழிகளாகிய பஞ்சாபி, பகாரி ஆகியவற்றால் ஆழமாக தாக்கம் பெறப்பட்டது. [5] கிட்டுவாரி மொழியானது காசுமீர மொழியின் மற்ற கிளை மொழிகளைக்காட்டிலும் பழமைய மரபுகளைக் காத்திருக்கும் மொழி  என்று கிரியர்சன் குறித்திருந்தார். இதற்குச் சான்றாக எழுவாய் மாற்றுப்பெயரீட்டுச் சொல்லாக து என்றிருப்பதையும் நிகழ்கால partciple ‘அன்’ இருப்பதையும் குறிப்பிட்டார். இவை பொதுச்சீர் காசுமீர மொழியில் மறைந்துவிட்டன.  கிட்டுவாரி மொழியின் ஒரு சொற்பட்டியலும் தொடக்கநிலை இலக்கண வரைவுகளை வடக்கு இமயமலையின் மொழிகள் என்னும் படைப்பில் தொகுக்கப்பட்டன [6]

1911 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிட்டுவாரி பேசிய 7,464 பேர் பதிவு செய்தனர்.

எழுத்து தொகு

கிட்டுவாரி மொழியை எழுத தக்கிரியின் ஒரு தனித்துவமான மாறுபாடு பயன்படுத்தப்படுகிறது என்று கிரியர்சன் குறிப்பிடுகிறார்; அத்துடன் நிலையான எழுத்துக்கூட்டலஅல்லது நிலையான எழுத்துவடிவம் இருப்பதாகத் தெரியவில்லை.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. CENSUS OF INDIA 2011. "LANGUAGE" (PDF). Government of India. p. 7.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "C-16 Population By Mother Tongue". Census of India 2011. Office of the Registrar General.
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kishtwari". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. Sheikh, Aejaz Mohammed; Kuchey, Sameer Ahmad (2014). "Kishtwari". Indian linguistics 75 (3–4): 55–66. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-0759. 
  5. Grierson, George Abraham Grierson. Linguistic Survey of India. Vol. 8. pp. 344–383.
  6. Bailey, Thomas Grahame. Languages of the Northern Himalayas. pp. 61–70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டுவாரி&oldid=3574213" இலிருந்து மீள்விக்கப்பட்டது