கிம் சோங்-நம்

கிம் சோங்-நம் (அங்குல் எழுத்துமுறை: 김정남; அஞ்சா: 金正男; 10 யூன் 1970 – 13 பிப்ரவரி 2017) 1994 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை வட கொரியாவின் தலைவராக இருந்த கிம் சோங்-இல் அவர்களின் மூத்த மகனாவார். 2001 வரை இவரே கிம் சோங் இல்லுக்கு அடுத்து ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.[1] தோக்கியோவின் டிசுனி லாண்டை பார்ப்பதற்காக போலி கடவுச்சீட்டு மூலம் சப்பானுக்குள் 2001 மே மாதம் நுழைய முயன்றது வெளிச்சத்துக்கு வந்து அதிக அளவில் மக்களால் பேசப்பட்டதால் இவர் தன் தந்தையின் ஆதரவை இழந்தார்.

கிம் சோங்-நம்
김정남
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1970-06-10)10 சூன் 1970
பியொங்யாங், வட கொரியா
இறப்பு13 பெப்ரவரி 2017(2017-02-13) (அகவை 46)
செபாங், சிலாங்கூர், மலேசியா
தேசியம்வட கொரியன்
அரசியல் கட்சி Workers' Party of Korea
துணைவர்சிங் சோங்-குய்
உறவுகள்கிம் சோங்-இல் (தந்தை)
சோங் கய்-ரிம் (தாய்)
கிம் இல்-சங் (தாத்தா)
கிம் சல்-சாங் (தந்தை வழி சகோதரி
கிம் சோங்-உன் (தந்தை வழி சகோதரர்)
கிம் சோங்-சல் (தந்தை வழி சகோதரர்)
பிள்ளைகள்கிம் ஆன்-சோல் உட்பட ஆறு
வாழிடம்மக்காவு
முன்னாள் கல்லூரிகிம் இல்-சங் பல்கலைக்கழகம்
Military service
பற்றிணைப்பு North Korea
கிளை/சேவை கொரிய மக்கள் இராணுவம்
கிம் சோங்-நம்
அங்குல் எழுத்துக்கள்김정남
Hancha金正男
McCune–ReischauerKim Chŏng-nam
Revised RomanizationGim Jeong-nam

2003 முதல் கிம் சோங்-நம் வட கொரியாவை விட்டு வெளிநாட்டடில் வசித்து வருகிறார். இவரது தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவரும் இவரை விட இளையவருமான கிம் சோங்-உன் செப்டம்பர் 2010 அன்று அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார்.[2] வெளிநாட்டில் வசித்த போது இவர் சில முறை தங்கள் குடும்ப ஆட்சியை விமர்சனம் செய்த்தோடு சீர்திருத்தத்தை ஆதரிப்பவராக இருந்துள்ளார்.[3] பிப்ரவரி 2017 அன்று மர்மமான முறையில் மலேசியாவில் வானூர்தி நிலையத்தில் கிம் சோங்-நன் பெண்ணால் கொல்லப்பட்டார். கொல்வதற்கு விசம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஐயப்பாடு உள்ளது. வட கொரியாவின் ஆட்கள் (இரு பெண்கள்) இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது.

வாழ்க்கை தொகு

ஆரம்ப வாழ்க்கை தொகு

கிம் சோங்-நம் பியோங்யாங் நகரில் சாங் கை -ரிம் என்பவருக்கும் கிம் சோங்-இல்லுக்கும் பிறந்தார். கிம் சோங்-இல்லின் பிள்ளை பெற்ற மூன்று உறவுகளில் ஒருவர் சாங் கை -ரிம். கிம் சோங்-இல் சாங் உறவை கிம்மின் தந்தை கிம் இல்-சங்க்கு பிடிக்காததால் இவர் இந்த உறவை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார். கிம் சோங்-நம்மை இல் பள்ளிக்கு அனுப்பாமல் சாங்கின் பெரிய சகோதரியிடம் வளர ஒப்படைத்தார்.[4]

கிம் சோங்-நம் அவரது தந்தையின் குணங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது பெரியம்மா கிம் கோவக்காரர் என்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர் என்றும் கலைகளில் இயல்பாகவே தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறுகிறார்.[5] கிம் சோங்-இல் போலவே இவருக்கும் திரைப்படங்களில் விருப்பம் உண்டு, பல குறும் படங்களையும் கதைகளையும் சிறு வயதிலேயே எழுதியுள்ளார். அவரின் அதே பெரியம்மா இவர் தன் தந்தைக்கு பின் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றும் கூறினார்.

கிம் சோங்-நம் 1995 முதல் சப்பானுக்கு பல முறை யாருக்கும் தெரியாமல் சென்று வந்துள்ளார். கிம் சோங்-நம் தோக்கியோவின் யோசிவாரா குளியல் அறைக்கு வாடிக்கையாளர். இது விலைமாந்தர் நிறைந்த இடமாகும்.

1998-2001: தந்தையின் வாரிசு தொகு

1998-ல், கிம் சோங்-நம் வட கொரியாவின் பொது பாதுகாப்பு துறைக்கு வருங்கால ஆட்சியாளர் என்ற முறையில் மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்..[6] இவர் கணினி ஆணையத்தின் தலைவராகவும் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சிக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்படதாக தெரிவிக்கப்படுகிறது. 2001 சனவரி சாங்காய் நகருக்கு சீன அதிகாரிகளிடம் தொழிற்நுட்ப துறை பற்றி பேச தன் தந்தையுடன் சென்றார்.

2001: டோக்கியோ டிசுனிலேண்ட் நிகழ்வு தொகு

மே 2001, கிம் சப்பானின் நரிட்டா பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் வருகை புரிந்ததும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் இரண்டு பெண்களுடனும் அவரது மகன் என அடையாறப்படுத்தப்படும் நான்கு வயது சிறுவன் ஆகியோர் அவருடன் வந்தார்கள். அப்போது பாங் சியங் எனப்படும் சீன பெயருடன் டொமினிக்கன் குடியரசின் போலி கடவுச்சீட்டு மூலம் பயணம் செய்தார்[7] மாண்டரின் சீனத்தில் பாங் சியங் என்றால் "கொழுப்பு கரடி" என்று பொருள்.[8] கைது செய்யப்பட்டவுடன் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.[9] அங்கு அவர் சப்பானுக்கு தோக்கியோவின் டிசுனிலேண்டை பார்ப்பதற்காக பயணித்ததாக கூறினார். இந்த நிகழ்வு தந்த மனவுளைச்சல் காரணமாக அவரது தந்தை முன்பே திட்டமிடப்பட்டு இருந்த சீன பயணத்தை விலக்கு செய்தார்.

2001-2005: ஆதரவை இழத்தல் தொகு

டோக்கியோ நிகழ்வு வரை கிம்மே நாட்டின் அடுத்த தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரி 2003, அன்று கொரிய மக்கள் இராணுவம் மதிக்கத்தக்க தாயே மிகவும் உண்மையானவரும் தலைவரின் விசுவாசியும் ஆவார் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கியது. இது கோ யங்-கி என்பவரை புகழ்வதாக புரிந்துகொள்ளப்பட்டது. இந்த பரப்புரை மூலம் கிம் சோங்-சல் அல்லது கிம் சோங்-உன் ஆகிய அவரின் மகன்களை வாரிசாக முன்மொழிவதாக கருதப்பட்டது[10]

தோக்கியோ நிகழ்வால் நம்மின் தந்தைக்கு பிறந்தவரான இவரை விட இளையவரான கிம் சோங்-உன்னை அவரது தந்தை வாரிசாக உருவானார்.[11] இராணுவத்தின் விசுவாசம் இருப்பதாலேயே கிம்மின் குடும்பம் வட கொரியாவாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதனால் இராணுவத்தின் புதிய முழக்கம் அப்போது நம் நிலையை எடுத்துரைத்தது. 2003 இல் கிம் சோங்-நம் மக்காவு பகுதியில் வாழ்வதாக கூறப்பட்டது அக்கருத்துக்கு வழு சேர்த்தது.[12]

கிம் சோங்-இல் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது வட கொரியாவை கிம் சோங்-உன் பொருப்பிலே விட்டுச் செல்வார் மார்ச் 2010 இல் வட கொரியா, தென் கொரியாவின் நீர்மூழ்கிக்கப்பலை மூழ்கடித்தது கிம் சோங்-உன்னின் நிலையை வலுப்படுத்தவே என்று வெளிநாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்

நம் சுவிட்சர்லாந்தில் படித்த போது சீர்திருத்த ஆதரவாளராக மாறினார் இதனால் கிம் சோங்-இல் நம் முதலாளித்துவ ஆதரவாளராக மாறி விட்டாரோ என ஐயம் கொண்டதே நம்மை பின்னால் ஆதரிக்காததின் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. சப்பான் நாளேடு ஆசிரியர் ஒருவரிடம் வட கொரியா வந்ததும் தான் நாட்டில் சீர்திருத்தை வழியுறுத்தியதாகவும் சந்தையை அரசு கட்டுப்பாடு இல்லாமல் இயங்க வைக்குமாறு கூறியதால் நம் முதலாளித்துவத்துக்கு மாறிவிட்டாரோ என தன் தந்தைக்கு ஐயம் தோன்றியதாகவும் அதனால் தனக்கும் தன் தந்தைக்கும் விரிசல் அதிகமாகியதாகவும் கூறினார்.

மேலும் தான் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு தன் தந்தை தனிமையாக இருப்பதாக உணர்ந்ததாகவும் பின் தன் தந்தைக்கு இரு மகன்களும் ஓர் மகளும் பிறந்ததும் அவரின் கவனம் அவர்கள் மேல் சென்றாதாகவும் இவர் வெளிநாட்டில் முதலாளித்துவம் பக்கம் திரும்பியதாக கருதியதாகவும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தார்[13]

2005-2017: கிம் சோங்-உன்னின் வளர்ச்சி தொகு

சவுத் சீன மார்னிங் போசுட் 1 பிப்ரவரி 2007 அன்று 3 ஆண்டுகளாக மெக்காவில் மறைவாக தன் குடும்பத்தாருடன் வாழ்வதாக தெரிவித்தது. இது மெக்காவ் & சீன அரசுகளுக்கு சங்கடத்தை உருவாக்கியது[14][15]

செப்டம்பர் 2010, நம்மின் இளைய சகோதரர் கிம் ஜோங்-உன் நம்மின் தந்தையின் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.[16][17] கிம் சோங்-உன் வட கொரியாவின் உச்ச தலைவராக கிம் சோங்-இல் மறைந்ததும் 24 டிசம்பர் 2011 ல் அறிவிக்கப்பட்டார்.

மரணம் தொகு

14 பிப்ரவரி 2017, அன்று கிம் சோங்-நம் மக்காவுக்கு செல்ல மலேசியாவிய கோலாம்பூர் வானூத்தி நிலையத்தில் காத்திருந்த போது ஐநாவால் தடை செய்யப்பட்ட வேதியியல் ஆயதத்தமான விஎக்சு மூலம் இரு அடையாளம் தெரியாத பெண்களால் கொல்லப்பட்டார்,[18][19][20][21] வியட்நாமிய கடவுச்சீட்டை கொலையாளி பெண் வைத்திருந்தார். இரு பெண்களும் வட கொரிய கொலையாளிகள் என்றும் ஐயம் எழுப்படுகிறது. தென் கொரிய உளவு நிறுவனம் கொல்லப்பட்டது கிம் சோங்-நம் தான் என்று கூறியுள்ளது[22] இவர் வியட்நாமிய கடவுச்சீட்டில் கிம் சோல் என்ற பெயரில் அப்போது பயணம் செய்தார்.[18] இந்நிகழ்வால் வடகொரியா, மலேசியாவுக்கான தன் தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. கிம்மின் உறவினர்கள் யாரும் முன்வராததால் டிஎன்ஏ சோதனை நடத்தி கொல்லப்பட்டவர் கிம் சோங்-நம் தான் என்று உறுதிபடுத்த முடியாததால் இறந்த்து கிம் என்று மலேசியா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. "Kim Jong-un's Big Threat: His Older Brother – Globalo" (in அமெரிக்க ஆங்கிலம்). 23 August 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  2. Christian Science Monitor article: "Kim Jong-un confirmed North Korean heir ahead of massive military parade."
  3. "North Korea's leader will not last long, says Kim Jong-un's brother". The Guardian. 17 January 2012. https://www.theguardian.com/world/2012/jan/17/north-korea-leader-not-long. பார்த்த நாள்: 17 January 2012. 
  4. Lee, Adriana S (23 June 2003). "Secret Lives". Time இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080408095913/http://www.time.com/time/magazine/article/0%2C9171%2C460254-1%2C00.html. பார்த்த நாள்: 29 October 2007. 
  5. Martin, Bradley K. (2006). Under the Loving Care of the Fatherly Leader: North Korea and the Kim Dynasty. St. Martin's Press. p. 697. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780312323226.
  6. Ryall, Julian (14 February 2017). "Profile: Who was Kim Jong-nam, the exiled half-brother of North Korean dictator Kim Jong-un?". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2017/02/14/profile-kim-jong-nam-exiled-half-brother-north-korean-dictator/. பார்த்த நாள்: 14 February 2017. 
  7. "金正日夫人去世使继承人问题又增悬疑".
  8. "Death of Kim's consort: Dynastic implications" (2 September 2004) பரணிடப்பட்டது 2013-10-03 at the வந்தவழி இயந்திரம்.
  9. Taylor, Adam (22 May 2015). "The sad story of Kim Jong Chul, the North Korean leader's brother and Eric Clapton megafan". The Washington Post. https://www.washingtonpost.com/news/worldviews/wp/2015/05/22/the-sad-story-of-kim-jong-chul-the-north-korean-leaders-brother-and-eric-clapton-megafan/. பார்த்த நாள்: 14 February 2017. 
  10. Allen, Dan (19 December 2011). "The Maybe-Gay Son of Kim Jong-Il Definitely Won't Be North Korea's Next Leader". Queerty. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
  11. Choe, Sang-Hun (27 May 2010). "Succession May Be Behind N. Korea's New Belligerence". The New York Times. http://www.nytimes.com/2010/05/28/world/asia/28north.html?ref=global-home. 
  12. Loh, Andrew. "Kim Jong-un's half-brother takes refuge in S'pore and Malaysia". The Global Citizen. Archived from the original on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Kim Jong-nam Says N.Korean Regime Won't Last Long". Chosun Ilbo (English Edition). 17 January 2012. http://english.chosun.com/site/data/html_dir/2012/01/17/2012011701790.html. பார்த்த நாள்: 17 January 2012. 
  14. Toy, Mary-Anne (2 February 2007). "Kim's playboy son parties in Macau". The Sydney Morning Herald. http://www.smh.com.au/news/world/kims-playboy-son-parties-in-macau/2007/02/01/1169919474231.html. பார்த்த நாள்: 14 February 2017. 
  15. Alfano, Seanc (1 February 2007). "Report: Kim Jong Il's Son Living In Macau". Associated Press. CBS News. http://www.cbsnews.com/news/report-kim-jong-ils-son-living-in-macau/. பார்த்த நாள்: 14 February 2017. 
  16. Kim Jong-il's grandson seen at concert பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம், RTHK, 18 July 2009
  17. North Koreans Bloster power of Ruler's Kin, by Marin Frackler and Mark McDonald, The New York Times 29 September 2010
  18. 18.0 18.1 "Kim Jong-nam death: Unravelling the mystery". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 26, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. Ryall, Julian; Rothwell, James (14 February 2017). "Kim Jong-un's half-brother 'assassinated in Malaysia by female North Korean spies with poison needle'". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2017/02/14/kim-jong-uns-older-brother-killed-north-korean-spies-poison1/. பார்த்த நாள்: 14 February 2017. 
  20. McCurry, Justin (14 February 2017). "Kim Jong-un's half-brother reportedly killed in Malaysia". The Guardian. https://www.theguardian.com/world/2017/feb/14/kim-jong-un-half-brother-reportedly-killed-malaysia-north-korea. பார்த்த நாள்: 14 February 2017. 
  21. "Kim Jong-nam: Killing could be sign of 'brutal' N Korean regime". News. BBC. 15 February 2017.
  22. "S. Korea: Fingerprints confirmed as Kim Jong Nam's". NHK. 16 February 2017 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170216080522/https://www3.nhk.or.jp/nhkworld/en/news/20170216_02/. பார்த்த நாள்: 16 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_சோங்-நம்&oldid=3928873" இலிருந்து மீள்விக்கப்பட்டது