கிரண் காந்தி

கிரண் காந்தி தொகு

கிரண் காந்தி [1]:{{{3}}} (பிறப்பு 1989) ஒரு மின்னணு இசை தயாரிப்பாளர்,மேளம் வாசிப்பவர், கலைஞர் மற்றும் ஆர்வலர் ஆவார். மேடையில் அவர் மேடம் காந்தி என்றும் அறியப்படுவார்.[2] அவரின் இசைத்தொழிலில் பயணம் செய்யும் மேளம் வாசிப்பவர் என்பதும் அடங்கும். காந்தியின் இசை மற்றும் ஈடுபாடு பெண்களின் கவனம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மேலும் நான்காவது-அலை பெண்ணியம் என்னும் இயக்கம் ஆகும். 2015-ல் இலண்டன் மராத்தனில் மாத விலக்கு நாளில் அக்களங்கத்தை வெல்லும் அடையாளமாக தடையற்ற குருதி கசிவுடன் ஓடினார். அவர் இசை பின் வரும் விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். அவை: பிட்ச்போர்க்கு, இலைட்னிங்கு இன் பாட்டில், இரோசுகில்டியன்டு எசுஎக்சுஎசுடபிள்யு.

ஆரம்ப வாழ்க்கை தொகு

1989 -ல் பிறந்த காந்தி, மீரா காந்தி மற்றும் சமூகத் தொழில் முனைவர் விக்ரம் காந்தியின் புதல்வி ஆவார்.[3] வளரும் போது நியுயார்க்கிலும் , மும்பை ,இந்தியாவிலும் நேரம் செலவழித்தார்.[4]

படிப்பும் தொழிலும் தொகு

2011-ல், சியார்ச்ட்வுன் பல்கலைக்கழகத்தில் கணிதம் , அரசியல் விஞ்ஞானம் , பெண்கள் ஆய்வு. இவற்றைப்படித்து இளநிலைப்பட்டம் பெற்றார். அதன் பின் கலிபோர்னியாவிலுள்ள சானமானிகாவில் இன்டர்சுகோப்பு இரெகார்ட்சு என்னுமிடத்தில் முதல் எண்முறை பகுப்பாய்வாளராக பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் முழு நேர தொழிலானது. அவர் தனது கணித திறமையை ப்பயன்படுத்தி சுபாடிபை என்ற எண்முறை சேவையிலும் இதர ஊடகத்திலும் தரவு வடிவங்களை ஆய்வு செய்தார்.[4]:{{{3}}}[1]:{{{3}}} [5]

2012-ல், காந்தி எம் ஐ ஏ வுடன் இணைந்து மேள வாசிப்பை பேட் கர்ல்சு என்னும் நிகழ்வுக்காக பதிவு செய்தார். 2013, பிப்ரவரியில் , எம்.ஐ.ஏ அவர் செய்த பதிவைப்புகழ்ந்து எழுதியதுடன் மாதங்கி[1] என்ற ஆல்பத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேளம் வாசித்து ஆதரவு தருமாறு வேண்டிக்கொண்டது.அதே நேரத்தில் காந்தி ஆர்வர்டு பிசினசு சுகூலில் படிக்க வந்த ஒரு அழைப்பை ஒத்துக்கொண்டுவிட்டார்.[6] எனவே 2013-ல் இன்டர்சுகோப்பு இரெகார்டுசுவை விட்டு காந்தி விலகினார்.[7]

2015-ல், 2015-ல் இலண்டன் மராத்தனில் மாத விலக்கு நாளில் அக் களங்கத்தை வெல்லும் அடையாளமாக தடையற்று குருதி வெளிப்பட ஓடினார். இதனால் எவ்வாறு மாத விடாய் ஆரோக்கியமும் , தூய்மையும் பல்வேறு கலாசாரங்களில் நடத்தப்படுகிறது என்கின்ற பேச்சு வெடித்து வைரலாகப் பரவியது.[8]:{{{3}}}

2015-ல், காந்தி ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முது நிலை மேலாண்மை வணிகம் பட்டம் பெற்றார்.[4]:{{{3}}}

2016-ல், காந்தியின் அறிமுகம் இபி வாய்சசு ஆல்பம் பதிப்பு.[6]:{{{3}}}

2017-ல், காந்தி பெண்ணை அடையாளப்படுத்தும் தயாரிப்பாளர்களுடன் வாய்சசு இரீமிக்சுடு என்ற ஆல்பத்தை வெளியிட ஒத்துழைத்தார். அந்த வருடம் ,வான்கூவர் மராதன் ஓடினார். அது. அனி டிஃப்ரான்கோவின் எழுச்சி சுற்றுப்பயணம் துவக்கும் செயலாயிற்று. அவர் ஐரோப்பா,இந்தியா முதலிய நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏர் பிஎன்பி, பண்டோரா, சுபாடிபை, ஐக்கிய நாடுகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் பேசினார்.

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 http://rollingstoneindia.com/drummer-kiran-gandhi-began-touring-m/
  2. "மேடம் காந்தி: About". Madame Gandhi.
  3. குரானா, சுவான்சு (2014-06-02). "இந்தியன் மேளம் வாசிப்பவர் கிரண் காந்தி செய்திகளின் புயல் கிளம்ப மேளம் கொட்டுகிறார்" (in en-US). தி இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/cities/delhi/the-iron-maiden/. 
  4. 4.0 4.1 4.2 https://web.archive.org/web/20170202062344/https://madamegandhi.blog/hi/
  5. https://www.vibe.com/2017/08/madame-gandhi-interview/
  6. 6.0 6.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  7. https://madamegandhi.blog/hi/
  8. "கிரண் காந்தி இலண்டன் மராத்தனில் ஓடும் போது தடையற்ற குருதி வெளியேற்றம் பற்றி விவாதிக்கிறார்". நியுயார்க் டயம்சு. என்.ஒய்.டி. Archived from the original on 2017-06-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_காந்தி&oldid=3707412" இலிருந்து மீள்விக்கப்பட்டது