கிராமணி

தமிழ் இனக்குழு

கிராமணி (Gramani) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் நாடார் இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]

கிராமணி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நாடார், சாணார்

சொற்பிறப்பு தொகு

கிராமணி என்றால் கிராமத்தின் அல்லது இனக்குழுவின் தலைவன் என்று பொருள்.[2]

தொழில் தொகு

இவர்களின் ஆதித் தொழிலே பனை மரம் ஏறுவதும், கள் இறக்குவதும் ஆகும்.[3] தற்போது சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்

வாழும் பகுதிகள் தொகு

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  2. டி.என்.ஜா, அசோகன் முத்துசாமி, ed. (2011). பண்டைய கால இந்தியா ஒரு வரலாற்று சித்திரம். பாரதி புத்தகாலயம். p. 105. கிராமணி என்றால் கிராமத்தின் அல்லது இனக்குழுவின் தலைவன் என்று பொருள்
  3. தொ பரமசிவன், ed. (2001). பண்பாட்டு அசைவுகள். காலச்சுவடு பதிப்பகம்,. p. 29. தெங்கும் பனையும் ஏறித் தொழில்செய்யும் சாதியாரை வட மாவட்டங்களில் ஈழவர்' என்ற பெயரில் பல்லவர் செப்பேடு குறிப்பிடுகின்றது.இப்பிரிவினரே இன்று கிராமணி' என அழைக்கப் படுகின்றனர்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. அரு. அருமைநாதன், ed. (1966). ம. பொ. சி. கண்ட பாரதி. பாரி கலை மன்ற வெளியீடு. p. 22. கிராமணி சாதியிலே தோன்றிய ம. பொ. சி. கிராமணிய சமுதாயத்தின் வாழ்விற்கே குழி தோண்டிப் புதைக்கும் காரியத்தை முன்னின்று நடத்திளுர்
  5. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு மதிப்பெண் கொடுக்கும் தேர்தல். தினமணி நாளிதழ். 20th செப்டம்பர் 2012. பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் மீனவர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கிராமணி. இவர்கள் இரண்டு பேரையும் ஜாதி அடிப்படையில் அக் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமணி&oldid=3537584" இலிருந்து மீள்விக்கப்பட்டது