கிருஷ்ண ராஜ்

இந்திய அரசியல்வாதி

கிருஷ்ண ராஜ் (Krishna Raj)(பிறப்பு: பிப்ரவரி 22, 1967) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.[1] இவர் 1996 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேச சட்டசபைக்கு முகமதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ண ராஜ்
வேளாண்மைத் துறை மேனாள் அமைச்சர்-இந்திய அரசு
பதவியில்
சூலை 2015 – 24 மே 2019
பின்னவர்கைலாஷ் சௌத்ரி
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்மிதிலேசு குமார்
பின்னவர்அருண் குமார் சாகர்
தொகுதிஜாஜகான்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 பெப்ரவரி 1967 (1967-02-22) (அகவை 57)
பைசாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வீரேந்திர குமார்
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி
As of 15 அக்டோபர், 2015

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பிப்ரவரி 22, 1967 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் ராம் துலாரே மற்றும் சுக் ராணிக்கு மகளாகப் பிறந்தார் கிருஷ்ண ராஜ். பைசாபாத் டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.

வகித்த பதவிகள் தொகு

↔உறுப்பினர், மனுக்கள் மீதான குழு. ↔உறுப்பினர், ஆற்றல் நிலைக்குழு. ↔உறுப்பினர், ஆலோசனைக் குழு, ஊரக வளர்ச்சி அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Default Web Page".
  2. "MyNeta Profile".
  3. 3.0 3.1 "What made Narendra Modi pick these 20 ministers?". https://economictimes.indiatimes.com/nation-world/what-made-narendra-modi-pick-these-20-ministers/krishna-raj-49/slideshow/53077607.cms. 
  4. 4.0 4.1 "Krishna Raj". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  5. 5.0 5.1 "Krishna Raj". Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_ராஜ்&oldid=3658820" இலிருந்து மீள்விக்கப்பட்டது