கிள்ளான் ஆறு

மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் பாயும் ஓர் ஆறு
(கிளாங் ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிள்ளான் ஆறு (Klang River) மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது இறுதியாக மலாக்கா நீரிணையில் கலக்கிறது. இதன் நீளம் 120 கி.மீ ஆகும். இதன் ஆற்றுப்படுகை 1288 சதுர கி,மீ ஆகும். இதில் 11 கிளையாறுகள் இணைகின்றன. இந்த ஆறு முன்னர் சுங்கை செலே என்றும் அழைக்கப்பட்டது.[1]

கிள்ளான் ஆறு
Klang River
Sungai Gombak
கோம்பாக் ஆறு (இடது) கிள்ளான் ஆறு (வலது) கோலாலம்பூரில் இணைகின்ற இடம்.
அமைவு
நாடுமலேசியா;
மாநிலம்சிலாங்கூர் & கோலாலம்பூர்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகோலா செலே
 ⁃ ஏற்றம்100 m (330 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
நீளம்120 km (75 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி50 m3/s (1,800 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகோம்பாக் ஆறு, டமன்சாரா ஆறு, பெஞ்சாலா ஆறு
 ⁃ வலதுகெராயோங் ஆறு

மிகுந்த மக்கள்தொகை கொண்ட கிள்ளான் பள்ளத்தாக்கு வழியாகப் பாய்வதால் கிள்ளான் ஆறு மிகவும் மாசுபடுத்தப்பட்ட ஆறாக விளங்குகிறது. விரைவான கட்டமைப்பு வேலைகளால் சில இடங்களில் இந்த ஆறு குறுக்கப்பட்டு ஓர் வெள்ளநீர் வடிகால் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் கோலாலம்பூரில் மிகுந்த மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது.[2][3]

ஆற்று வழித்தடம் தொகு

கோலாலம்பூருக்கு வடகிழக்கே 25 கி.மீ. (16 மைல்) தொலைவில், பகாங் மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கும் கோம்பாக், கிள்ளான் கேட்ஸ் எனும் மலைப் பகுதியில் கிள்ளான் ஆறு உருவாகிறது.

கிள்ளான் ஆறு 11 முக்கிய துணை ஆறுகளால் இணைக்கப்பட்டு உள்ளது. கோம்பாக் ஆறு, பத்து ஆறு, கெராயோங் ஆறு, டாமன்சாரா ஆறு, குரோ நதி, குயோ ஆறு, பென்சாலா ஆறு மற்றும் அம்பாங் ஆறு ஆகியவை கிள்ளான் ஆற்றின் துணை ஆறுகளாகும். கிள்ளான் ஆறு மேற்குத் திசை வழியாக ஓடி மலாக்கா நீரிணையில் கலக்கிறது.

கிள்ளான் ஆற்றுப் படுகையில் உள்ள இடங்கள் தொகு

வெள்ளக் கட்டுப்பாடு தொகு

கிள்ளான் ஆற்றின் கரைகளில் நிரம்பி வழியும் வெள்ளத்தால் கோலாலம்பூர் அடிக்கடி பாதிக்கப்பட்டு உள்ளது. 1926-ஆம் ஆண்டில், ஒரு முறை கடுமையான வெள்ளம் கோலாலம்பூரைத் தாக்கியது.[4]

அதன் பின்னர் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில் திட்டங்கள் தொடங்கின. கோம்பாக் - கிள்ளான் ஆறுகளின் சங்கமத்திற்கு கீழே உள்ள கிள்ளான் ஆற்றின் ஒரு பகுதி நேர் செய்யப்பட்டது.

ஆற்றைத் திசை திருப்புவதற்காக வெள்ளத் தடுப்புக் கரைகள் உருவாக்கப்பட்டன. இந்தத் திட்டம் 1932-இல் முடிக்கப்பட்டது.[5]

கோலாலம்பூர் வெள்ளத் தணிப்பு தொகு

கிள்ளான் ஆற்று வெள்ள நீரை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூர் வெள்ளத் தணிப்பு என்பது கோலாலம்பூரைப் பாதிக்கும் திடீர் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டமாகும்.

பத்து, ஜிஞ்சாங் மற்றும் கெப்போங்கில் அமைந்து உள்ள மழைநீர் குளங்களுக்குள் கோம்பாக் நதியின் வெள்ள நீரைத் திசை திருப்புவதும் அந்தத் திட்டத்தில் அடங்கும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "The Klang River winds through Malaysia's capital city of Kuala Lumpur and flows through the most densely populated area of the Southeast Asian country". AECOM. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  2. Zikri, Arif. "After over a year of MCO, Klang River shows signs of improvement with less waste collected... Landasan Lumayan Sdn Bhd's (LLSB) Selangor Maritime Gateway (SMG) project which is responsible for the rehabilitation and rejuvenation of the river has seen less waste being collected from the river since the first MCO". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  3. "Klang River, stretching some 120km, has been heavily polluted for decades due to ignorance of nearby residents and businesses who have turned the river into a dumping ground". Twentytwo13.my. 25 October 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  4. Gullick, J.M. (1983). The Story of Kuala Lumpur, 1857–1939. Eastern Universities Press (M). பக். 252–253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-908-028-5. https://books.google.com/books?id=pOZKAAAAMAAJ. 
  5. Gullick, J.M. (1983). The Story of Kuala Lumpur, 1857–1939. Eastern Universities Press (M). பக். 252–253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-908-028-5. https://books.google.com/books?id=pOZKAAAAMAAJ. 
  6. "Archived copy". Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2007-12-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

மேலும் காண்க தொகு

மலேசிய ஆறுகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்_ஆறு&oldid=3705655" இலிருந்து மீள்விக்கப்பட்டது