கிளாந்தான் கெப்பிங்

கிளாந்தான் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள்

கிளாந்தான் கெப்பிங் (ஆங்கிலம்: Kelantan Keping; மலாய் மொழி: Keping Kelantan); என்பது 1909-ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள் ஆகும். சில்லறை நாணயங்கள் (Coins) பித்திசுகள் (Pitis) என்று அழைக்கப்பட்டன. 1909-ஆம் ஆண்டுக்குப் பின்னர் நீரிணை டாலர்கள் (Straits Dollar) பயன்படுத்தப்பட்டன.

கிளாந்தான் கெப்பிங்
Kelantan Keping
Keping Kelantan
அலகு
குறியீடுK
மதிப்பு
வங்கித்தாள்கெப்பிங்
Coins1 பித்தி; 10 பித்திசுகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) கிளாந்தான்
வெளியீடு
நடுவண் வங்கிகிளாந்தான் சுல்தானகம்
1909 வரையில்

ஒரு கிளாந்தான் கெப்பிங்கிற்கு (டாலர்) 10 பித்திசுகள். ஒரு பித்திசு என்றால் ஒரு செண்டு அல்லது ஒரு காசு. ஈய உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட பித்திசு நாணயங்களின் நடுவில் துவாரங்கள் இருந்தன.[1]

பொது தொகு

ஒரு கிளாந்தான் பித்திசு, வட்ட வடிவத்தில், மென்மையான விளிம்புகளில் ஒரு துளையுடன் இருக்கும். ஒரு பித்திசு நாணயத்தின் விட்டம் 18 மி.மீ. அதில் அரபு எழுத்துக்கள் (Arabic Legend) எழுதப்பட்டு இருக்கும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "pitis coin on coin catalog".
  2. "pitis coin description on coin guide".

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

‎ ‎

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாந்தான்_கெப்பிங்&oldid=3667381" இலிருந்து மீள்விக்கப்பட்டது