கிளாஸ் எப்னர்

ஆஸ்திரியாவின் எழுத்தாளர்

கிளாஸ் எப்னர் (Klaus Ebner, பிறப்பு: ஆகஸ்ட் 8,1964) அவுஸ்திரியாவின் வியன்னா நகரில் வாழும் ஓர் எழுத்தாளர். மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை வடிப்பிலும் பெயர் பதித்தவர். அவரது கவிதைகள் ஜெர்மன் மொழிலும், கடலான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன[1]. அவர் அவுஸ்திரியா எழுத்தாளர் மன்றங்கள் GAV[2] & OSV உறுப்பினர் ஆவார்.1980-களில் கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தார்.1990களில் கணினி மென்பொருளில் புத்தகங்கள் எழுதிவந்தார்.கடலான் தலைப்புகளில் பல வித கலாச்சார கட்டுரைகளையும் யூத பழக்கவழக்கங்களை வைத்து கதைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் கதை தொகுப்பு 2007ஆம் ஆண்டில் வெளியானது. 2008-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் குறுநாவலான ஹோமனிட்(Homonide)-ஐப் பதிப்பித்தார். தன்னுடைய எழுத்துப் பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆத்திரிய இலக்கிய விமர்சகர்கள் இவருடைய கவிதை நடையை மிகவும் புகழ்ந்துள்ளனர். இவர் வியன்னா நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

கிளாஸ் எப்னர்
2007இல் கிளாஸ் எப்னர்
பிறப்பு8 ஆகத்து 1964 (அகவை 59)
வியன்னா
படித்த இடங்கள்
  • வியன்னா பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
சிறப்புப் பணிகள்Hominid
இணையம்http://www.klausebner.eu/

வாழ்க்கை தொகு

1980களில் வியன்னா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியும், மொழிபெயர்ப்புக் கலையும் கற்றார்.வியன்னாவின் இலக்கிய இதழ் ஒன்றிற்குப் பணி புரிந்தார்.[3] மொழிபெயர்ப்பாளராக. மொழி ஆசிரியராகத் தகவல்தொழில்நுட்ப மேலாளராகப் பணிகள் புரிந்துள்ளார். 1990 ஆம்ஆண்டில் கணினி மென்பொருள் பற்றிய புத்தகங்கள் எழுதினார். 2001ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இசுலாம் அடிப்படைவாதம் பற்றிப் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரை எழுதி அது ஜெர்மனியிலும் வெளியானது.[4]

பள்ளிநாட்களிலிருந்தே கிளாஸ் எப்னர் சிறுகதைகளும், கவிதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வந்தார். இலக்கிய மற்றும் பண்பாட்டு இதழ்களில் இவை வெளியாயின. 2004 ஆம் ஆண்டிற்குப்பிறகு கூடுதலாக இலக்கியத் தொகுதிகளை வெளியிட்டார்[5]. இன்று புனைவு, புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள்,கவிதைகள் எனப் பல பரிணாமங்களில் வெளிப்பட்டிருக்கிறார். அவரது அரசின் ஆதரவுடன் 2007இல் அன்டோரா சென்று கட்டுரை எழுதியுள்ளார்[6].

எப்னர் பலவித மனிதர்கள், சமூகங்கள், மொழிகள், சமயங்கள் பற்றி எழுதுகிறார்[7]. 2007ஆம் ஆண்டு இவரது கவிதை "a paperman and sick" பன்னாட்டுக் கவிதையரங்கில் சிறப்பான கவிதையாகக் குறிப்பிடப்பட்டது[8].

2008ஆம் ஆண்டு வியன்னாவின் வினேர் வெர்ஸ்டாட்ப்ரீ 2007க்கான விருது பெற்றார். பரிசு பெற்ற சிறுகதை Der Flügel Last (சிறகுகளின் சுமை)புற்றுநோயால் துன்புறும் ஏழுவயதுச் சிறுமியைப் பற்றியது.

கிளாஸ் எப்னர் வியன்னாவில் வாழ்ந்து,பணிபுரிந்து வருகிறார்.

பணி தொகு

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், எப்னர் சிறு கவிதைகளையும், பாடல்களையும், வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார். அவருடைய இப்பணிகள் ஆத்திரியாவின் பல இலக்கிய மற்றும் கலாச்சார இதழ்களில் வெளியிடப்பட்டன. 1988-ல் முதுகலை பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரையை பிரெஞ்சு மொழியில் எழுதினார். அதன் தலைப்பு, "கற்பனாவாத காலத்திலிருந்து இன்று வரை பிரெஞ்சு இலக்கியத்தில் கடலான் நாடுகளின் அமைகை". 1987-ல் பதிப்பிக்கப்பட்ட கடலான் நாட்குறிப்பு எனும் பயண அனுபவ புத்தகத்தில் கடலான் கலாச்சாரத்தை பற்றி எழுதியுள்ளார். மேலும் பல கட்டுரைகள் வாயிலாகவும் கடலான் கலாச்சாரத்தை எழுதியுள்ளார்.

1987-ல் அவருக்கு மகன் பிறந்தார். மேலும், அதிகமாகிய பணிச் சுமைகளாலும் அவ்வாண்டில் அவருடைய இலக்கிய பங்களிப்பில் சிறு தொய்வு ஏற்பட்டது. 1990-களில் தன்னுடைய நாவலுக்கு (Feuers Geraun) அதிக கவனம் செலுத்தினார். அதன் முதல் இரண்டு வடிவங்கள் ஆத்திரிய பத்திரிகையான டை ராம்பேவில் முறையே 1994, 1997-ல் வெளியாயின. இவ்விரு அதிகாரங்களில் யூத மற்றும் பைபிள் பழக்கவழக்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். அவருடைய இணைய தளத்தில், 2004 வரை, அந்நாவலின் 6 அதிகாரங்கள் வரிசையிடப்பட்டுளன. ஆனால் மொத்தம் 17 பதிப்புகள் 2005-2008 காலத்தில் வரிசையிடப்பட்டுளன.

மேலும் எப்னர் புனைவுகளையும் (புதினங்கள், சிறு கதைகள், சிறு கவிதைகள்) கட்டுரைகளையும் பாடல்களையும் இயற்றியுள்ளார். இடாயிச்சு மற்றும் கடலான் மொழிகளில் இவருடைய படைப்புகள் உள்ளன. ஆத்திரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2007-ல் அன்டோரா சென்றார். அங்கு பிரநீஸ் பற்றிய புதினம் ஒன்றை எழுதுவதற்காக சென்றார். கடலான் மொழியில் ஜோசப் நவோரா சான்தேலாலிய-வால் எழுதப்பட்ட L'Absent புதினத்தை ஜெர்மானிய மொழிக்கு பெயர்த்தார். கடலான் கலாச்சாரங்களான பார்சிலோனா மற்றும் அன்டோராவை பற்றிய கலாச்சார கட்டுரைகள் இலக்கிய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான Lose (Destinies) 2007-ம் வருடம் வெளியிடப்பட்டது. அவற்றுள் இருபத்தி இரண்டு கதைகள் ஏற்கனவே பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டவை ஆகும். 2008-ல் மேலும் இரண்டு புனைவுகளை வெளியிட்டார். அதில் அவர்தம் குறுநாவலான ஹோமிநிடும் அடங்கும்.

அவரது இலக்கிய விருதுகள் தொகு

  • 2008 அவுஸ்திரிய அரசின் இலக்கியத்திற்கான பொருளுதவி
  • 2007 வினேர் வெர்ஸ்டாட்ப்ரீ 2007(Wiener Werkstattpreis 2007), வியன்னா
  • 2007 அவுஸ்திரிய அரசின் போக்குவரத்து பொருளுதவி
  • 2007 சிறப்பு குறிப்பு: Premio Internazionale di Poesia Nosside, ரெக்கியோ
  • 2005 பெல்ட்கிர்ஷெர் லிரிக்ப்ரீ(Feldkircher Lyrikpreis) (4வது)
  • 2004 லா கடலானா லே லெட்டர் 2004 சிறப்புக் குறிப்பு (La Catalana de Lletres 2004)(பார்சலோனா)
  • 1988 எர்ஸ்டர் ஆஸ்டர்ரிசேர்ச்சேர் யுகேன்ட்ப்ரீ (Erster Österreichischer Jugendpreis) - நீல்ஸ்(Nils)நாவலுக்காக
  • 1984 இலக்கிய இதழ் டெக்ஸட் (Texte) வானொலி நாடகப் பரிசு (3வது)
  • 1982 எர்ஸ்டர் ஆஸ்டர்ரிசேர்ச்சேர் யுகேன்ட்ப்ரீ(Erster Österreichischer Jugendpreis) Das Brandmal/வடு

புத்தகங்கள் தொகு

ஜெர்மன் மொழி புத்தகங்கள் தொகு

  • Hominide/Hominid; குறுநாவல் (ஜெர்மன் மொழியில்), FZA Verlag, வியன்னா 2008, ISBN 978-3-9502299-7-4
  • Auf der Kippe/விளிம்பில்; சிறுகதைகள் (ஜெர்மன் மொழியில்), Arovell Verlag, Gosau 2008, ISBN 978-3-902547-67-5
  • Lose/வெற்றிகள்; சிறுகதைகள் (ஜெர்மன் மொழியில்), Edition Nove, Neckenmarkt 2007, ISBN 978-3-85251-197-9

கடலான் மொழி புத்தகங்கள் தொகு

  • Vermells/சிவப்பின் நிறங்கள், கவிதை(கடலான் மொழியில்), SetzeVents Editorial, Urús 2009, ISBN 978-84-92555-10-9

மேற்கோள்கள் தொகு

  1. பார்க்க:வாழ்க்கை வரலாறு Auf der Kippe, Gosau 2008, பக்கம் 139.
  2. GAV members' list, entry about Klaus Ebner[தொடர்பிழந்த இணைப்பு], retrieved on 2009-02-12.
  3. Austrian National Library; see entries about the magazine Texte பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம், Vienna 1983-1986.
  4. Ebner, Klaus: Islamischer Fundamentalismus in der EU/Islamic Fundamentalism in the EU; essay (in German), GRIN Verlag, Munich 2001/2007, ISBN 978-3-638-69698-2
  5. அவரது ஆக்கங்களின் பட்டியலை அவரது இணையதளத்தில் பதிவிட்ட ஆண்டு உட்பட பார்க்க: www.klausebner.eu
  6. See Ebner, Auf der Kippe, p. 139 (biography).
  7. See the stories Notruf (Emergency Call), Momentaufnahme (Snapshot) and Der Pflegling (The Foster Son) in: Ebner, Klaus: Lose, Neckenmarkt 2007.
  8. See Amoroso, Giuseppe: L'immaginario dei poeti del Nosside 2007 e il loro potere di esprimere il mondo, Città del Sole Edizioni ISBN 978-88-7351-184-7, Reggio Calabria 2007; p. 41 (Italian version), p. 49f. (Spanish version), p. 58 (Portuguese version).

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாஸ்_எப்னர்&oldid=3240274" இலிருந்து மீள்விக்கப்பட்டது