கிளிவேட்டி சஞ்சீவையா

கிளிவேட்டி சஞ்சீவையா (Sanjeevaiah Kiliveti) என்பவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019-ல் நடந்த ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சூலூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

கிளிவேட்டி சஞ்சீவையா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014 - முதல்
தொகுதிசூலூர்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1966
கடலூர், தடா மண்டலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்பசலா சுபாசினி
பிள்ளைகள்இரண்டு மகள்கள்
பெற்றோர்இராசையா, மசுதானம்மா
வாழிடம்(s)இராணுவ காலனி, நெல்லூர்

பிறப்பு, கல்வி தொகு

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம், தடா மண்டலத்தில் உள்ள கடலூர் கிராமத்தில் இராசையா மற்றும் மசுதானம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் கிளிவெட்டி சஞ்சீவையா. இளம் பொறியியல் பட்டதாரியான இவர், 1993ல் வீட்டு வசதித் துறையில் பொறியாளராகச் சேர்ந்து பணியில் சேர்ந்தார்.[2]

அரசியல் தொகு

கிளிவேட்டி சஞ்சீவையா 2013ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி நிறுவிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரான பசாலா பென்ஹலயாவின் அரசியல் வாரிசாகச் சேர்ந்தார். இவர் 2014தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக சூலூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்தில் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் கிளிவேட்டி சஞ்சீவய்யா 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Sakshi (2019). "వైఎస్సార్సీపీ" இம் மூலத்தில் இருந்து 2 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211102121523/https://www.sakshi.com/election-2019/results/party/ysrcp/ap.html. பார்த்த நாள்: 8 November 2021. 
  2. Sakshi (18 March 2019). "నెల్లూరు బరిలోని వైఎస్సార్‌సీపీ అభ్యర్థులు వీరే" (in te) இம் மூலத்தில் இருந்து 5 జనవరి 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220105042102/https://m.sakshi.com/news/andhra-pradesh/ysrcp-announced-candidates-list-nellore-1171062. பார்த்த நாள்: 5 January 2022. 
  3. Sakshi (16 May 2014). "ఆంధ్రప్రదేశ్ విజేతలు" (in te) இம் மூலத்தில் இருந்து 6 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211106044818/https://m.sakshi.com/news/elections-2014/winners-in-andhra-pradesh-131007. பார்த்த நாள்: 6 November 2021. 
  4. Sakshi (2019). "MLA Candidates Winners LIST in Andhra Pradesh Elections 2019" இம் மூலத்தில் இருந்து 8 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211108163950/https://www.sakshi.com/election-2019/en/results/andhra_pradesh/mla. பார்த்த நாள்: 8 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிவேட்டி_சஞ்சீவையா&oldid=3624175" இலிருந்து மீள்விக்கப்பட்டது