கீதா அனந்தன்

இந்திய அரசியல்வாதி

கீதா அனந்தன் (Geetha Anandan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் முதுகலை தமிழில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் புதுச்சேரி ஒன்றிய பகுதியான காரைக்கால் மாவட்டத்தின் நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

தேர்தல் தொகு

கீதா ஆனந்தன் 2011ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவிலிருந்து சுயேச்சை வேட்பாளர் வி. எம். சி. சிவகுமார் வெற்றி பெற்றார். கீதா ஆனந்தன் இந்தத் தேர்தலில் சுமார் 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[2]

மீண்டும் 2016 தேர்தலில் கீதா திமுக வேட்பாளராகப் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டார். இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட வி. எம். சி. சிவகுமார் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் கீதா ஆனந்தன் 6936 வாக்குகள் வித்தியாசத்தில் சிவக்குமாரைத் தோற்கடித்தார்.[3]

2021ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "A.Geetha(DMK):Constituency- NERAVY T.R. PATTINAM(PUDUCHERRY) - Affidavit Information of Candidate:". www.myneta.info.
  2. "NERAVY-T.R.PATTINAM Constituency Result in Puducherry Assembly Election 2011". www.indianballot.com. Archived from the original on 2018-12-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  3. Prakash, M. "Neravy T.R. Pattinam 2016 Assembly MLA Election Pondicherry - Entranceindia".
  4. "Geetha Anandan(Independent(IND)):Constituency- NERAVY-T.R.PATTINAM(KARAIKAL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_அனந்தன்&oldid=3549963" இலிருந்து மீள்விக்கப்பட்டது