கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா கடத்தல் வழக்கு

கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா கடத்தல் வழக்கு ( Geeta and Sanjay Chopra kidnapping case ரங்கா-பில்லா வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது [1] 1978 இல் புதுடில்லியில் நடந்த கடத்தல் மற்றும் கொலை குற்ற வழக்காகும். [2] குல்ஜீத் சிங் (ரங்கா குஸ் என்றழைக்கப்படும் ) மற்றும் ஜஸ்பீர் சிங் (பில்லா என அழைக்கப்படுபவர்) ஆகியோரால் உடன்பிறப்புகளான கீதா மற்றும் சஞ்சய் ஆகியோர் கடத்தப்பட்டு, கொலை செய்வது சம்பந்தப்பட்டது. மீட்புப் பணத்திற்காக இந்த சிறுவர்கள் கடத்தப்பட்டனர், ஆனால், அவர்களின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி என்பதை அறிந்தவுடன், இருவரும் கொல்லப்பட்டனர். கீதா கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் தடயவியல் சான்றுகள் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. கடத்தல்காரர்கள் முதலில் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டனர், ஆனால் பின்னர் அந்த அறிக்கையை திரும்பப் பெற்றனர். இரண்டு கடத்தல்காரர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 1982 ஆம் ஆண்டில் அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கிரைம் ரோந்து டயல் 100 பிப்ரவரி 28, 2018 மற்றும் மார்ச் 1, 2018 அன்று சோனி தொலைக்காட்சியில் 723 & 724 ஆகிய இரண்டு அத்தியாயங்களை ஒளிபரப்பியது. நிஜ வாழ்க்கை நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட பன்வார் தொலைக்காட்சி தொடரிலும் இந்த வழக்கு காட்டப்பட்டது.

கடத்தல் தொகு

கீதா சோப்ரா, புது தில்லியில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் (16½ வயது) 2 ஆம் ஆண்டு பயின்று வந்த மாணவி ஆவார். அவரது சகோதரர் சஞ்சய், 14 வயது மாடர்ன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். அவர்களின் தந்தை மதன் மோகன் சோப்ரா, இந்திய கடற்படையில் தலைவராக இருந்தார். அவர்கள் தௌலா குவானில் உள்ள அதிகாரிகளின் இல்லத்தில் வசித்து வந்தனர்.

அக்டோபர் 26, 1978 சனிக்கிழமையன்று, கீதா மற்றும் சஞ்சய் ஆகியோர் அகில இந்திய வானொலியில் யுவ வாணி என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்தனர். அவர்கள் இரவு 7 மணிக்கு சன்சத் வீதியில் உள்ள அகில இந்திய வானொலி அலுவலகத்தை அடைய வேண்டும் என்றும் இரவு 9 மணியளவில் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களின் தந்தை அவர்களை அகில இந்திய வானொலிக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தனர்.

மாலை 6:15 மணிக்கு உடன்பிறப்புகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு மனிதர், குலா நந்த் அவர்களை தௌலா குவானில் உள்ள சுற்றுச்சந்தியில் பார்த்தார். எம் நந்தா என்ற மனிதர் குழந்தைகளை கோலே டாக் கானவிற்கு அழைத்துச் செல்ல உதவுவதாகக் கூறினார். அந்த நேரத்தில் சாரல் பெய்தது. [3] [4] மாலை 6:30 மணியளவில், கோல் தக் கானாவில் உள்ள யோகா ஆசிரமத்திற்கு அருகில், குருத்வாரா பங்களா சாஹிப்பில் இருந்து வடக்கு அவென்யூ நோக்கி பயணித்தபோது, ஒரு கடுகு வண்ண ஃபியட் மகிழுந்துவை பகவான் தாஸ் கவனித்தார். மைகிழுந்துவில் இருந்து சத்தம் கேட்டதால், அவர் தனது குதியுந்துவை நிறுத்திவிட்டு அருகில் வந்தார். அவர் ஒரு பெண் , ஓட்டுநரின் முடியை இழுப்பதை பார்த்தார் மற்றும் ஒரு பையன் ஓட்டுநருடனும், சண்டையிட்டார். அந்த மகிழுந்து வில்லிங்டன் மருத்துவமனை நோக்கி விரைந்தது. மேலும் பலர் மகிழுதுவை நிறுத்த முயன்றனர். பாபு லால் என்ற ஒருவர், தனது சைக்கிளை கீழே இறக்கி மகிழுந்துவின் கதவு கைப்பிடியைப் பிடிக்க முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார். இது குறித்து தாஸ் காவல்துறையினரிடம் புகார் செய்தார். மாலை 6:45 மணிக்கு, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசியில் அழைத்து செய்து, காரின் உரிம எண் HRK 8930 என்று சொன்னார், ஆனால் அது MRK 8930 என அலுவலரால் குறிப்பிடப்பட்டது. அந்த பெண் உதவிக்காக கூக்குரலிட்டதாகவும் தாஸ் தெரிவித்தார். [4]

சான்றுகள் தொகு

  1. Mazumder, Ranjib (2015-08-28). "India's Infamous Five: Murder Cases That Shook the Nation". The Quint (in ஆங்கிலம்). Archived from the original on 2016-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  2. "Ranga-Billa redux: How rapists were sent to gallows". Archived from the original on 10 April 2015.
  3. (16 November 1979). Text
  4. 4.0 4.1 Pramod Kumar Das. Famous Murder Trials: Covering More Than 75 Murder Cases in India.