கீரனூர் இராமமூர்த்தி


கீரனூர் இராமமூர்த்தி [1] ஒரு மேடைப் பேச்சாளர்.[2][3] ஆன்ம நேய மாமணி, ஆன்மீக சிரோன்மணி, இதிகாசப் பிரச்சாரகர், உபன்யாச சேகரி, சத் கதா வர்சி (சத்திய கதை மழை), திண்ணை இராமாயண சிற்பி, பகவத் சேவா, பாரத வேரிகை, புராணப் புதுமணி, மதுர ராம மணி, ராமகதா பிரச்சார சூடாமணி, ராமாயண சக்கரவர்த்தி, லகு ராமாயண விளம்பி, வாரியார் வாரிசு, விரிவுரை வித்தகர் சாரதி, வெல்லச் சொல் வித்தகர், ஸ்ரீ ராமாயண பிரசங்க ரத்னா, ஸ்ரீ ராமாயண பிரவசன பூஷன் முதலான பட்டங்களை வழங்கிப் பெருமக்கள் இவரைச் சிறப்பித்துள்ளனர்[4]. இராமாயணம், பாரதம், பாகவதம், திருத்தொண்டர், ஆழ்வார்கள், சிலப்பதிகாரம் முதலான பல்வேறு தலைப்புகளில் இவர் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவரது சொற்பொழிவுகளில் சில பதிவில் உள்ளன.[5]

திண்ணை இராமாயண சிற்பி
கீரனூர் இராமமூர்த்தி
பிறப்புபெயர்: இராமமூர்த்தி
நாள்:(1940-12-31)திசம்பர் 31, 1940
இடம்:கீரனூர், மயிலாடுதுறை அருகில், தமிழ்நாடு, இந்தியா
இறப்புநாள்: ஏப்ரல் 3, 2018(2018-04-03) (அகவை 77)
இடம்: தில்லை கங்கா நகர், சென்னை 600 061
தொழில்கணக்குப் பதிவு, திண்ணைப் பேச்சு
தேசியம்இந்தியர்
கல்விகணக்கியல்
வகைபுராணப் புத்துரை
துணைவர்செயசீலா
பிள்ளைகள்மகன் – சுரேஷ், மகள் இருவர் சுகன்யா, சுபாசினி

மேற்கோள் தொகு

  1. Keeranur Ramamurthi
  2. திண்ணை இராமாயண சிற்பி கீரனூர் இராமூர்த்தி, கம்பன் கண்ட இராமன் - நூல் , ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்க வெளியீடு, சனவரி 2018, 268 பக்கங்கள் கொண்ட நூல்
  3. Nanganallur Talk, Weekly, April 8-14, 2018
  4. திண்ணை இராமாயண சிற்பி கீரனூர் இராமூர்த்தி, கம்பன் கண்ட இராமன் - நூல் , ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்க வெளியீடு, சனவரி 2018, 268 பக்கங்கள் கொண்ட நூல், அட்டை, 2 ஆம் பக்கம்
  5. youtube
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரனூர்_இராமமூர்த்தி&oldid=2718429" இலிருந்து மீள்விக்கப்பட்டது