குகி மக்கள்

இந்திய குடியரசு மற்றும் பர்மாவில் வாழும் பல மலைவாழ் பழங்குடியினரில் ஒருவர்

குகி அல்லது சின் மக்கள் திபெத்திய பர்மிய பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.[1] பேச்சுவழக்கு மற்றும் வாழும் பகுதியின் அடிப்படையில் சுமார் என்பது பழங்குடி உட்பிரிவினராக பகுக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 55 லட்சம் குகி மக்கள் உள்ளனர்.[2] இரண்டாம் உலகப் போரில் குகி மக்கள் ஜப்பானிய பேரரசு இராணுவத்துடனும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்துடனும் இணைந்து நட்பு அணி நாட்டு படைகளுக்கெதிராக போரிட்டனர்.

குகி பழங்குடியினரின் வாழ்விடப் பெயர்ச்சி

வாழிடம் தொகு

அருணாசலப் பிரதேசம் தவிர்த்த இந்தியாவின் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் வடமேற்கு பர்மாவிலுள்ள சின் மாநிலத்திலும் வங்காளத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

மொழி தொகு

குகி-சின், குகி-சின்-மிசோ, குகி-நாகா என அழைக்கப்படும் சீன திபெத்து குடும்பத்தைச் சேர்ந்த குகிய மொழி

சமயம் தொகு

பெரும்பாலான குகி மக்கள் புரோட்டஸ்டன்ட் கிருத்துவ சமயத்தை பின்பற்றுபவர்கள்.

பண்பாடு தொகு

காட்டிக் கொடுத்தல் மரணதண்டனைக்குரிய குற்றமாக அறியப்படுகின்றது. பெருமளவில் பெண்களுக்கு உரிமை குறைவான இச்சமூகத்தில் அடிமைத்தனமும் வழக்கில் இருந்துள்ளது.

இவற்றையும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  2. http://www.peoplegroups.org/explore/ClusterDetails.aspx?rop2=C0113


"https://ta.wikipedia.org/w/index.php?title=குகி_மக்கள்&oldid=3766858" இலிருந்து மீள்விக்கப்பட்டது