குடிமேனஅள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

குடிமேனஅள்ளி (KUDIMENAHALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

குடிமேனஅள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,105
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635204

மக்கள்வகைப்பாடு

தொகு

இந்த ஊரானது காவேரிப்பட்டணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 269 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1623 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6105 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3115, பெண்களின் எண்ணிக்கை 3010 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 70.3% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

நடுகல்

தொகு

இந்த ஊரில் உள்ள வீரக்கரர் கோயிலில் இரண்டு நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன. அதில் ஒன்று ஊர் தலைவருக்கானது. இது 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு நடந்த ஒரு பூசலில் ஊரைக்காக்க ஊர் தலைவர் கொல்லப்பபடால் நடுகல் எடுக்கபட்டதாக எரியவருகிறது. நடுகல்லில் தலைவர் என கருதப்படுபவர் குதிரையின்மீது அமர்ந்துள்ளார். கையில் இரண்டு வாள்கள் உள்ளன. அவர் இறந்த பிறகு உடன்கட்டை ஏறிய அவரது இரண்டு மனைவிகளும் நடுகல்லில் இடம்பெற்றுள்ளனர். குதிரையை வழிந்த்திச் செல்லும் சேவகனும் நடுகல்லில் இடம் பெற்றுள்ளான். இந்த நடுகல் இக்கோயிலின் கருவரையில் இடம்பெற்றுள்ளது.[2] இந்த ஊரில் மேலும் சில நடுகற்கள் உள்ளன.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிமேனஅள்ளி&oldid=3632612" இலிருந்து மீள்விக்கப்பட்டது