குடும்பூர் ஆறு

குடும்பூர் ஆறு (Kudumbur River) என்பது முக்கியமாக இந்திய மாநிலமான கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறாகும். இதன் மூலமும் சில ஆரம்ப பகுதிகளும் கருநாடகாவின் குடகு மற்றும் தெற்கு கன்னடா மாவட்டங்களில் உள்ளன. இது பயசுவினி ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாகும்.

குடும்பூர் ஆறு
Kudumbur River
தடுப்பணை
அமைவு
Country இந்தியா
மாநிலம்கேரளம், கருநாடகம்
மாவட்டம்காசர்கோடு, தெற்கு கன்னடம், குடகு.
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுதலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்
 ⁃ ஏற்றம்1,310 மீட்டர்கள் (4,300 அடி)
முகத்துவாரம்பயசுவினி
 ⁃ ஆள்கூறுகள்
12°28′54″N 75°04′43″E / 12.4816°N 75.0786°E / 12.4816; 75.0786
 ⁃ உயர ஏற்றம்
20 மீட்டர்கள் (66 அடி)
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்பயசுவினி

ஆற்றோட்டம் தொகு

கருநாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலைக்காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் குடும்பாற்றின் மூலாதாரம் அமைந்துள்ளது. இதன் மூலத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து, வெள்ளரிக்குண்டு வட்டத்தில் உள்ள பாணத்தூருக்குக் கிழக்கே கேரளாவைக் கடந்து செல்கிறது. இது பாணத்தூருக்கு மேற்கே கேரளா-கர்நாடக எல்லையைக் கடந்து, மீண்டும் கர்நாடகாவில் பாய்ந்து, பனத்தடிக்கு கிழக்கே கேரளாவைக் கடக்கும் முன் சிறிது தூரம் செல்கிறது. இது பனத்தடிக்கு வடக்கே கரிவேடகத்தின் தெற்கே கடந்து, சிறிது தூரம் தெற்கே திரும்பி கல்லாற்றின் மேற்கு பகுதியில் செல்கிறது. இதன் பிறகு, மீண்டும் மேற்கு நோக்கித் திரும்பி, வெள்ளரிக்குண்டு மற்றும் காசர்கோடு வட்டங்களுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைகிறது. பின்னர், இது காசர்கோடு மற்றும் கோசுதுர்க்கா வட்டத்தின் இடையேயான எல்லையின் ஒரு பகுதியை வரையறுக்கிறது. பெரியாவின் வடக்கே, குடும்பூர் ஆறு வலப்புறமாக வளைந்து, வடக்குப் பாதையை எடுத்துக்கொள்கிறது. சட்டாஞ்சலுக்குக் கிழக்கே இந்த ஆற்றின் இடது கரையில் பயசுவினி ஆற்றில் சேரும் வரை வடக்கு நோக்கிச் செல்கிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Draft Map" (PDF). keralaczma.gov.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  2. "District Census Handbook - Kasaragod District 2011" (PDF). Directorate of Census Operations-Kerala. 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  3. "Kudumbur Bridges". bridgemeister.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பூர்_ஆறு&oldid=3780087" இலிருந்து மீள்விக்கப்பட்டது