குண்டுபொதி

ஒரு சிதறுதுமுக்கியின் குண்டுபொதி என்பது,  வழக்கமாக பல சிறிய, உலோக, கோள வடிவ எறியங்களான "குண்டுகளைக்" கொண்டிருக்கும் ஒரு தன்னிறைவான வெடிபொதி ஆகும். பாரம்பரியமாக, ஈயம் தான் பயன்படுத்தப்பட்டது; சுற்றுச்சூழலை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டதால், இப்போது எஃகு, தங்குதன், அல்லது பிசுமத் பயன்படுத்தப்படுகிறது. பல சிறு-குண்டுகளுக்கு பதில், சிதறுதுமுக்கிப் பரல் எனப்படும், ஒரேயொரு பெரிய எறியத்தையும் கூட பயன்படுத்தலாம்.   

ஒரு 12-கேஜ் குண்டுபொதி. இதன் ஒளிபுகு நெகிழி உறையின் ஊடாக, உள்ளிருக்கும் பொருளடக்கத்தை காணலாம். இடமிருந்து வலமாக:
1. பித்தளை,
2. உந்துபொருள்,
3. மருந்தின்மேல்-திணிப்பு,
4. குண்டுத் திணிப்பு,
5. #8 பட்சிகுண்டு,
6. குண்டின்மேல்-திணிப்பு, மற்றும்
7. அடைப்பு.

பெரும்பாலான குண்டுபொதிகள் மரையில்லாத குழலில் இருந்து சுடுவதற்கே வடிவமைக்கப்பட்டன, ஆனால் மரையிட்ட குழலுடைய சில பிரத்தியேகமான சிதறுதுமுக்கிகளில், நிலையமர்த்தப்பட்ட பரல்களை மட்டுமே பயன்படுத்த இயலும். நிலையமர்த்தப்பட்ட பரல்களின் துல்லியத்தை, மரையிட்ட குழல் அதிகரிக்கும்; ஆனால் குண்டுகளை சுடுவதற்கு இது ஏற்றதல்ல, ஏனெனில் குண்டுபொதிக்கு ஊட்டப்படும் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்கு விசை, அதனுள் கொத்தாக உள்ள குண்டுகளை கலைத்து பரவலாக ஆக்கிவிடும். ஒரு மரையிட்ட பரல்லை மரையிட்ட குழலில் மட்டுமல்லாது, மரையில்லாத குழலிலும் பிரயோகிக்கலாம்.[1] மீள்மம் போன்ற குறைந்த-அடர்த்தி கொண்ட பொருட்களால் ஆன பரல்களை பிரயோகிக்கும் சாகடிக்காத வெடிபொதிகளும், சிறப்பு சிதறுதுமுக்கி தளவாடங்களுள் ஒன்றாகும். 

வழக்கமான வடிவமைப்பு  தொகு

அக்காலத்து கைத்துப்பாக்கி மற்றும் புரிதுமுக்கியின் பொதியுறையை போலவே, முற்கால குண்டுபொதிகளும் பித்தளை உறைகளை தான் பயன்படுத்தின. ஃபெல்ட் (ஒரு வகையான துணி), பதனிட்ட தோல், கட்டை, அட்டை ஆகியவை திணிப்புகளாக பல நேரங்களில் பயன்படுத்தப்படும். குண்டுமேல்-திணிப்பு மீது சோடியம் சிலிக்கேட்டை பூசி, பொதியுறை மூடப்படும். இந்த முற்கால குண்டுபொதிகளில், கைத் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே விட்டமுள்ள எரியூட்டிகள் பயன்படுத்தப்பட்டன. 

1877-ன் ஆரம்பத்தில், காகித உறைகள் வந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு (1960-களின் முடிவு வரை) காகித உறைகள் பிரபலமாக இருந்தன. காகித உறைகளின் முனைகள் சுருட்டி மூடப்பட்டன, பிறகு மடித்து மூடுவதும் பிரபலமானது. பித்தளையால் ஆன குண்டுபொதிகளைப் போல் அல்லாமல், காகித குண்டுபொதிகளின் எரியூட்டியுடன் அதில் ஒரு பட்டடையும் இருந்ததால், குண்டுபொதியின் எரியூட்டி மேலும் உயரமாக ஆனது. ஃபெல்ட், பதனிட்ட தோல், கட்டை, அட்டை ஆகியவற்றால் ஆன திணிப்புகள்; படிப்படியாக நெகிழியாக மாற்றம் பெற்றன. 1960-களின் ஆரம்பத்தில், பொதியுறைகள் காகிதத்தில் இருந்து நெகிழிக்கு மாற ஆம்பித்துவிட்டன. 1980-களின் வாக்கில், பெரும்பாலான காகித உறைகள், நெகிழியாக மாற்றம் பெற்றுவிட்டன.

இன்று, ஒரு வழக்கமான நவீன குண்டுபொதி என்பது, மெல்லிய பித்தளை தகட்டால் அடிப்பாகம் மூடப்பட்ட, நெகிழி உறையை கொண்டிருக்கும். எப்போதும் அதிக சக்தி வாய்ந்தவைகளில் "மிகை பித்தளை" (பித்தளையால் உறையின் மேற்பரப்பு கூடுதலாக மூடியிருக்கும்) உறைகளை பயன்படுத்துவர், குறைந்த சக்தி வாய்ந்தவற்றில் "குறைவுப் பித்தளை" உறைகள் பயன்படுத்தப்படும். அந்த கூடுதல் பித்தளையால் அதன் ஸ்திரம் ஏதும் அதிகரிக்காது; ஆனால், அதிக மற்றும் குறைந்த சக்தி வாய்ந்தவைகளை சுடுநர் எளிதில் இனம் கண்டு கொள்வதற்கு, தோற்றத்தில் மட்டுமே ஒரு வித்தியாசத்தை அளிக்கும்.

 
வெடிமருந்தையும் குண்டுகளையும் பிரிக்கும், ஃபெல்ட் (ஒரு வகையான துணி) திணிப்பு உள்ள 1908-ல் இருந்த குண்டுபொதியின் வரைபடம்.  

பெரிய சிதறுதுமுக்கி எரியூட்டியை வைப்பதற்கு ஏதுவாக குண்டுப்பொதியின் அடிபகுதி போதுமான தடிமனுடன் இருக்கும். இது புரிதுமுக்கி மற்றும் கைத்துப்பாக்கி வெடிபொதிகளை விட பெரிதாய் இருக்கும். ஆரம்பத்தில் குண்டுபொதிகளில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொடியை விட, இப்போதிருக்கும் புகையற்றப் பொடிகள் சக்தி வாய்ந்தவை. (வெடி)பொடிக்கு அடுத்து திணிப்பு இருக்கும். திணிப்பு வைத்திருப்பதன் நோக்கம்:

  1. பொடியும், குண்டும் கலப்பதை தவிர்க்க; மற்றும்
  2. குண்டுக்கு உந்துதலை அளிக்காமல் வாயுக்கள் அதனை கடந்து செல்வதை தவிர்க்க வகை செய்யும், ஒரு அடைப்பான் ஆக விளங்க. 

அளவுகள்  தொகு

கேஜ்
(ஒரு பவுண்டில்
இருக்கும்
ஈய குண்டுகளின்
எண்ணிக்கை )
ஒரு குண்டின்
விட்டம் 
10 0.78" (19.7 மிமீ)
12 0.73" (18.5 மிமீ)
16 0.66" (16.8 மிமீ)
20 0.62" (15.6 மிமீ)
28 0.55" (14.0 மிமீ)

பிரிட்டனில் குண்டுபொதிகளின் அளவீடு "கேஜ்" (gauge) ஆகும், இதையே ஐக்கிய அமெரிக்காவில் "போர்" (bore) என்று குறிப்பிடுவர்.[2] புரிதுமுக்கி மற்றும் கைத்துப்பாக்கிகள் எப்போதுமே "கேலிபர்"-ல் அளக்கப்படும். மில்லிமீட்டர் அல்லது இன்ச்சுகளில் அளக்கப்படும், குழலில் உள்-விட்டம் / எறியத்தின் விட்டம் தான் 'கேலிபர்' அளவீடு ஆகும். மாறாக, குழலின் உள்-விட்டத்தை ஒத்த விட்டம்முடைய, சுத்தமான ஈயத்தால் ஆன ஓர் பந்தின் எடையை, ஒரு பவுண்டின் பின்னம்மாக குறிப்பதே 'கேஜ்' அளவீடு ஆகும்.  

 
.22 லாங் ரைபிள் வெடிபொதியுடன் (இடது), 9 மிமீ குண்டுபொதி (வலது)

உதாரணமாக, ஒரு சிதறுதுமுக்கியை 12-கேஜ் என்று குறிப்பிடுவதன் காரணம் என்னவென்றால், அதன் குழலின் உள்-விட்டதோடு கச்சிதமாக பொருந்தும் ஒரு ஈயப் பந்தின் எடையானது, ஒரு பவுண்டில் பன்னிரண்டிலொரு (112) பாகம் ஆக இருக்கும். இந்த அளவீட்டுமுறை, முற்கால பீரங்கிகளின் அளவுகளை குறிப்பிடப்படும் முறையில் இருந்து வந்தது தான்—ஒரு "12 பவுண்டர்" என்பது 12-பவுண்டு (5.5 கிகி) எடையுள்ள குண்டை சுடும் பீரங்கி ஆகும்; நேர்மாறாக, ஒரு "12-கேஜ்" குண்டு, 112 பவுண்டர் (38 கி) ஆக இருக்கும். இதனால், ஒரு 10-கேஜ் சிதறுதுமுக்கியின் குழல் விட்டம், 12-கேஜ் சிதறுதுமுக்கியை விட பெரிதாய் இருக்கும்; அதேபோல் 12-கேஜ் சிதறுதுமுக்கியின் குழல் விட்டம், 20-கேஜ் சிதறுதுமுக்கியை விட பெரிதாய் இருக்கும்.

 
.22 லாங் ரைபிள் வெடிபொதியுடன் (இடது), எம்35 .410 குண்டுபொதி (வலது)

12-கேஜ் சிதறுதுமுக்கி தான் மிகப் பிரபலமானது. வாத்து மற்றும் வான்கோழி போன்ற பெரிய பட்சிகளை வேட்டையாட ஒரு காலத்தில் பெரிய 10- கேஜ் சிதறுதுமுக்கிகள் பிரபலமாக இருந்தன. ஆனால், அதே செயல்திறனை அளித்த "மேக்னம்" 12-கேஜ் குண்டுபொதிகளின் வரவு, 10-கேஜ்ஜின் சரிவுக்கு வித்திட்டது. நடுத்தர-அளவான 20-கேஜ்ஜும், அதன் குறைவான பின்னுதைப்புக்காக பிரபலமானது. இதர குறைவாக அறியப்பட்ட, ஆனாலும் வணிகரீதியில் கிடைக்கப்பெறும் அளவுகள் தான் 16 மற்றும் 20 கேஜ். 4, 8, 24 மற்றும் 32 கேஜ் துப்பாக்கிகள் அனைத்தும், சேகரிப்பாளரின் அறிய வகைகள் ஆகும். கேஜ் அல்லாமல், விட்டத்தால் அளக்கப்படும் சில சிதறுதுமுக்கிகளும் உள்ளன. அவைகள் .410  (10 மிமீ), .380 (9 மிமீ), மற்றும் .22 (5.5 மிமீ) ஆகும்; இவற்றைக் குறிப்பிடும் போது, ".410 கேஜ்" என்று சொல்லாமல், ".410 போர்" என்று சொல்வதே சரி ஆகும். 

.410 போர் தான், வணிகரீதியில் எளிதில் கிடைக்கப்பெறும் மிகச்சிறிய சிதறுதுமுக்கி அளவு ஆகும். ஐக்கிய இராச்சியத்தில், 9 மிமீ சிதறுதுமுக்கிகள் "தோட்டத்து துப்பாக்கி"-யாக பொதுவாக பயன்படுத்தப்படும். அளவுவிடும் முறைகளை ஒப்பிட்டால், .410-ஐ கேஜ்ஜில் அளந்தால், அது 67- அல்லது 68-கேஜ் (துல்லியமாக 67.62-கேஜ்) ஆக இருக்கும்.

சிதறுதுமுக்கியின் கேஜ்-விட்டம்  சூத்திரம் தொகு

 
 
 

உதாரணமாக, கேஜ் (n) = 67.6 ஆக இருந்தால், பந்தின் விட்டம் (dn) = 0.410 இன்சுகளாக இருக்கும்..

குண்டின் அளவுகள்  தொகு

இலக்கைப் பொருத்து, குண்டுபொதிக்குள் பல்வேறு அளவிலான குண்டுகள் இடுப்படும். பக்கவாட்டு எறிதட்டுச் சுடுதலுக்கு, எண்.8 அல்லது எண்.9 போன்ற சிறிய அளவுக் குண்டுகள் பயன்படுத்தப்படும், ஏனெனில் வீச்செல்லை குறைவு என்பதாலும், அடர்த்திமிகு தோரணை (pattern) தேவை என்பதாலும் தான். நேர் எறிதட்டுச் சுடுதலில், அதிக வீச்செல்லையின் தேவை உள்ளதால், பெரிய குண்டுகள் (பொதுவாக #7½) பயன்படுத்தப்படும். எறிதட்டு சுடுதலில் பயன்படுத்துவது போன்ற சிறிய குண்டு ஆனது, 100 யார்டு (91 மீ) தூரத்திலேயே அதன் அனைத்து சக்தியையும் இழந்துவிடும், இதனால் குடியிருப்பு பகுதிகளில் கூட இந்த  விளையாட்டை ஆடலாம்.

பட்சிக்குண்டு / பேர்டு-குண்டு தொகு

 
ஒரு 12-கேஜ் பட்சிக்குண்டு பொதி 

பட்சிகுண்டின் அளவுகளுக்கும், சிதறுதுமுக்கி கேஜ்ஜை போலவே இலக்கங்கள் (எண்கள்) இடப்பட்டுள்ளது. அளிக்கப்பட எண் சிறியதாக இருப்பின், குண்டின் அளவு பெரியதாய் இருக்கும் (விதிவிலக்காக சுவீட வழக்கில், இது அப்படியே தலைகீழாக இருக்கும்). "எண்.9 குண்டு" அல்லது "BB குண்டு" போன்ற பட்சிகுண்டுகள் பொதுவாக "குண்டு" என்று மட்டுமே சொல்லப்படும்.

அமரிக்க, ஐரோப்பிய (வழக்கமான), பெல்ஜிய, இத்தாலிய, நார்வீஜிய, எசுப்பானிய, சுவீட, பிரித்தானிய, மற்றும் ஆஸ்திரேலிய குண்டுகளின் அளவுகளில் சின்னசின்ன வேறுபாடுகள் உள்ளன. இது ஏனென்றால், சிலர் விட்டத்தை இன்சுகளிலும் (அமெரிக்கா), சிலர் விட்டத்தை மில்லிமீட்டரிலும் (ஐரோப்பா), மற்றும் பிரித்தானிய அமைப்பில் ஒரு அவுன்சில் உள்ள ஈய குண்டுகளில் எண்ணிக்கை வைத்தும் அளவிடுகின்றனர்.  

எண்ணிடப்பட்ட குண்டின் விட்டத்தை (இன்ச்சில்) நினைவில் வைக்க ஒரு எளிய முறை என்னவென்றால், 17-ல் இருந்து குண்டின் அளவை கழித்தால் பெறப்படும் விடையானது, ஓர் இன்ச்சின் நூறிலொரு (1/100) பாகமாக இருக்கும். உதாரணமாக,  #2 குண்டை எடுத்துக் கொண்டால் 17-2 = 15; ஆக #2 குண்டின் விட்டம் "15/100 அல்லது 0.15" என்று அர்த்தம். B குண்டின் விட்டம் .17 இன்ச் ஆகும், BB மற்றும் BBB அளவுகளுக்கு .01 கூடிகொண்டே போகும். மெட்ரிக் அளவியலில், #5 குண்டு 3 மிமீ என்று நினைவில் வைத்தால் போதும், அதிகரிக்கும் அல்லது குறையும் ஒவ்வொரு எண்ணுக்கும், விட்டத்தில் 0.25 மிமீ வித்தியாசம் இருக்கும். உதாரணமாக, #7 குண்டு 2.5 மிமீ கொண்டது ஆகும்.

ஐக்கிய அமெரிக்க அளவு ஐரோப்பிய ஒன்றிய அளவு சுவீடன் அளவு ஐக்கிய  இராச்சிய அளவு ஆஸி. அளவு உத்தேச விட்டம்  ஒரு அவுன்சுக்கான
(28 கி)
உருண்டைகளின்
எண்ணிக்கை 
ஒரு பவுண்டுக்கான
எண்ணிக்கை[3]
ஈயம் எஃகு
FF .230" (5.84 மிமீ) 35
F .220" (5.59 மிமீ) 27 39
TT .210" (5.33 மிமீ)
AAA .205" (5.20 மிமீ)
AAA .203" (5.16 மிமீ) 35
T AAA .200" (5.08 மிமீ) 36 53
AA .191" (4.93 மிமீ) 40
BBB AA .190" (4.83 மிமீ) 44 62 550
BB A .180" (4.57 மிமீ) 50 72 650
ஏர் ரைஃபிள் BBBB அல்லது

2/0

.177" (4.50 மிமீ)
B .170" (4.32 மிமீ) 86
எண்.1 BB BB .160" (4.06 மிமீ) 72 103 925
எண்.1  7 .158" (4.00 மிமீ)
எண்.2 B .150" (3.81 மிமீ) 87 125 1120
எண்.2  6 .148" (3.75 மிமீ)
எண்.3 .140" (3.56 மிமீ) 108 158 1370
எண்.3  5 .138" (3.50 மிமீ)
எண்.2 எண்.2 .134" (3.40 மிமீ)
எண்.4 .130" (3.30 மிமீ) 135 192 1720
எண்.4  4 எண்.3 எண்.3 .128" (3.25 மிமீ) 140
எண்.5 எண்.4 எண்.4 .120" (3.05 மிமீ) 170 243 2180
எண்.5  3 .118" (3.00 மிமீ)
எண்.6 எண்.5 எண்.5 .110" (2.79 மிமீ) 225 315 2850
எண்.6  2 .108" (2.75 மிமீ)
எண்.5½ எண்.5½ .107" (2.72 மிமீ) 240
எண்.6 எண்.6 .102" (2.59 மிமீ) 270
எண்.7 .100" (2.54 மிமீ) 291 423
எண்.7  1 .098" (2.50 மிமீ)
எண்.7½ .094" (2.40 மிமீ)
எண்.7½ எண்.7 எண்.7 .095" (2.41 மிமீ) 350 490 3775
எண்.8 எண்.7½ .090" (2.29 மிமீ) 410 686 5150
எண்.8 00 .089" (2.25 மிமீ)
எண்.8 எண்.8 .087" (2.21 மிமீ) 472
எண்.8½ .085" (2.15 மிமீ) 497
எண்.8½ .083" (2.10 மிமீ)
எண்.9 எண்.9 எண்.9 .080" (2.03 மிமீ) 585 892 7400
எண்.9 000 .079" (2.00 மிமீ)
எண்.10 .070" (1.78 மிமீ) 848
எண்.10 எண்.10 .070" (1.78 மிமீ) 850
எண்.10 .069" (1.75 மிமீ)

எண் 11 மற்றும் எண் 12 குண்டுகளும் உள்ளன. இவை இரண்டும் மிக நெருங்கிய வீச்செல்லையில் (நான்கு யார்டுகளுக்கும் குறைவான) பாம்புகள், எலிகள் போன்றவைகளை கொல்ல பிரயோகிக்கும் சிதறுதுமுக்கியில் பயன்படுத்தப்படும். இவ்வாறான குண்டுபொதிகள் கைத்துப்பாக்கிகளில் (குறிப்பாக சுழல் கைத்துப்பாக்கியில்) இருந்து சுடும் வகையில் இருப்பவை.[4]

பட்சிகுண்டின் தேர்வுகள் தொகு

வேட்டை ஈயம்/தங்குதன்  எஃகு
ஃபெசன்ட் கோழி  4 முதல் 6 வரை 2 முதல் 3 வரை[5]
வான்கோழி 4 முதல் 6 வரை  2 முதல் 3 வரை
காடை, புறா 7½ முதல் 8 வரை
முயல் 6 முதல் 7½ வரை
அணில் 6
அன்னம் 2 முதல் BB வரை 1 முதல் TT வரை
சிறிய வாத்து 4 முதல் 6 வரை 2 முதல் 4 வரை
பெரிய வாத்து 2 முதல் 4 வரை 2 முதல் BB வரை

வேட்டையாடுவதற்கு, வீச்செல்லையை மட்டும் அல்லாது, எதை வேட்டையாடப் போகிறோம் என்பதை பொருத்தும், குண்டின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இரையைக் கொல்வதற்கு, போதுமான ஆழத்திற்கு அதனுள்ளே ஊடுருவுவதற்கான ஆற்றலுடன், குண்டு இலக்கை அடையதல் வேண்டும். ஈய குண்டு தான் சிறந்த எறியியற் பண்புகளை கொண்டது ஆகும்; ஆனால் சுற்றுசூழலுக்கு ஈயம் கேடு விளைவிப்பதால், எஃகு பிசுமத், அல்லது தங்குதன் கலவைகள் தேவைப்படுகிறது. ஈயத்தை விட குறைவான அடர்த்தியை எஃகு கொண்டிருப்பதால், எஃகு குண்டுகள் அளவில் பெரியதாய் இருக்க வேண்டும்; இருப்பினும், ஈயத்திற்கு அடுத்து எஃகு தான் நல்ல தேர்வு ஆகும். தங்குதன் கடினம் மிகுந்தது என்பதால், பழைய துப்பாக்கிகளில் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில் அதிக கடினம் ஆனது, குழலை சேதப் படுத்தி விடலாம். தங்குதன் குண்டை இரும்பு மற்றும் நிக்கல்லுடன் கலப்பதால் மென்மையாகும். இந்த கலப்புலோகம், ஈயத்தை விட 1/3 மடங்கு அடர்த்தி மிகுந்து இருக்கும், இதன் விலையும் அதிகம். பிசுமத் குண்டு, அடர்த்தியிலும் விலையிலும், எஃகுக்கும் தங்குதனுக்கும் நடுவே இருக்கும்.

மான்குண்டு / பக்-குண்டு தொகு

மான் போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாட பிரயோகிக்கப்படும், பெரிய அளவிலான குண்டுகளை தான் "மான்குண்டு" அல்லது "பக்" (buck, ஆண் மான்) என்பர். மான்குண்டின் அளவுகளை குறிப்பிடுவற்கு அதன் விட்டம், அல்லது (பாரம்பரியமாக) எழுத்தோ அல்லது எண்ணோ பயன்படுத்தப்படும். "0"-வை ("ஆட்" = "aught") விட பெரிய அளவுகளை, ஒன்றிற்கும் மேற்பட்ட பூஜ்ஜியங்களால் குறிக்கப்படும். "00" ("இரு-ஆட்") தான் மிகப் பொதுவாக பயன்படுத்தப்படும் அளவு ஆகும்.

பிரித்தானிய அளவுகள், ஒரு அவுன்சில் உள்ள குண்டுகளின் எண்ணிக்கையை சார்ந்தது. அளவுகள் LG (Large Grape, பெரிய திராட்சை), MG (Medium Grape, நடுத்தர அளவு திராட்சை), மற்றும் SG (Small Grape, சிறிய திராட்சை) என வகைப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் சிறிய விலங்குகளுக்கு, SG-ன் பாதி எடையை கொண்ட SSG குண்டு, SSG-ன் பாதி எடையை கொண்ட SSSG குண்டு, SSSG-ன் பாதி எடையை கொண்ட SSSSG குண்டு, என சென்றுகொண்டே இருக்கும்.  

ஐக்கிய
அமெரிக்க
அளவு
ஐக்கிய
இராச்சிய
அளவு 
ஆஸி.
அளவு
உத்தேச
விட்டம்
ஒரு அவுன்சுக்கான
(28 கி)
உருண்டைகளின்
எண்ணிக்கை 
ஈயம் எஃகு
மூ-பந்து 12
[12 கேஜ்]
0.60" (15.2 மிமீ) 1.4
மூ-பந்து 20
[20 கேஜ்]
0.52" (13.2 மிமீ) 2.1
#000 பக்

("மூ-ஆட் ")

LG .36" (9.1 மிமீ) 6.2
MG .346" (8.79 மிமீ) 7
SG .332" (8.44 மிமீ) 8
#00 பக்

("இரு-ஆட்")

00-SG .330" (8.38 மிமீ) 8
#0 பக்

("ஓர்-ஆட்")

.32" (8.1 மிமீ) 9
#1 பக் .30" (7.6 மிமீ) 11
சிறப்பு SG .298" (7.57 மிமீ) 11
#2 பக் SSG .27" (6.9 மிமீ) 14
SSG .269" (6.83 மிமீ) 15
#3 பக் .25" (6.4 மிமீ) 18
SSSG .244" (6.3 மிமீ) 20
#4 பக் .240" (6.10 மிமீ) 21
SSSSG .227 (5.77 மிமீ) 25
F .22" (5.59 மிமீ) 27 39
SSSSS
அல்லது

AAAA

.213 (5.41 மிமீ) 30
AAA .203" (5.16 மிமீ) 35
T .200" (5.08 மிமீ) 36 53

பரவலும் தோரணையும்   தொகு

பெரும்பாலான நவீன விளையாட்டு சிதறுதுமுக்கிகளில், துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டுகளில் பரவல்லை சுடுநர் கட்டுப்படுத்த, கழற்றிமாட்டக் கூடிய நெரிவுக் குழல்கள் (choke tubes) உள்ளன. சில தருணங்களில் கழற்றி மாற்ற நேரம் இருக்காது; உதாரணமாக, ஒரு ஒற்றைக்குழல் சிதறுதுமுக்கியால் குறுகலான தோரணையில் (pattern) சுட்ட மறுகணமே, ஒரு விலகிச் செல்லும் இலக்கை அகன்ற தோரணையில் சுட வேண்டி இருக்கும்போது. மேலும் சில சிதறுதுமுக்கிகளில், நெரிவுக்குழலே இல்லாமல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். குண்டுகளின் பரவலை, குண்டுபொதியின் பண்புகளில் மாற்றம் செய்தும் கட்டுப்படுத்த முடியும்.

குறுகலான தோரணை  தொகு

ஒவ்வொரு குண்டிற்கும் இடையேயான வெற்றிடத்தை, நெகிழி உருண்டைகள்[6], மரத்தூள், அல்லது இதுபோன்ற பொருட்களால் நிரப்பப்படும். சுடும் பொழுதில், உச்சபட்ச முடுக்கத்தால் குண்டுகளின் உருக்குலைவை, இந்த நிரப்புப் பொருட்கள் குறைக்கின்றன. அந்திமனி-ஈய கலப்புலோகம், தாமிர-முலாம்பூசிய ஈய குண்டு, எஃகு, பிசுமத், மற்றும் தங்குதன் கலப்பு குண்டுகளின் கடினத்தன்மை, தூய ஈயக் குண்டை விட மிகுதியாக இருப்பதால், உருக்குலைவும் குறைவாகவே இருக்கும். கோள குண்டுகள் நேராக பாயும் பண்புடையது என்பதால்; உருக்குலைவை குறைப்பதன் விளைவாக, நெருக்கமான தோரணை கிடைக்கும். குண்டுகளுக்கு இடையில் மெழுகை உருக்கி ஊற்றுவதன் மூலமாகவும், குறுகலான தோரணை சாத்தியமே.[6] 

அகன்ற தோரணை  தொகு

இயன்ற அளவுக்கு மென்மையான குண்டை பயன்படுத்துவதன் விளைவாக, குண்டின் உருக்குலைவு அதிகரித்து, அகன்ற தோரணையை கிடைக்கும். (சிறய காகிதம் அல்லது நெகிழியைப் போன்ற) விரிவாக்கும் திணிப்புகள், குண்டுகளுக்குப் பின்னால் வைக்கப்படும். குண்டுகள் துமுக்கிக் குழலில் இருந்து வெளியேறுகையில், வைக்கப்பட்டுள்ள விரிவாக்கும்-திணிப்பு, குண்டுகளை மையத்தை விட்டு விலக உதவும். (சுத்தியலால் அடித்து நீளுருண்டை வடிவாக) உருக் குலைக்கப்பட்ட குண்டுகளும், கனசதுர வடிவ குண்டுகளும் கூட விரிந்த / அகன்ற தோரணையை அளிக்கும். ஆனால், சில போட்டிகளில் விரிவாக்கும் திணிப்பு மற்றும் கோள வடிவில்லாத குண்டுகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

பரவல் தொகு

இலக்கு தாக்கப்படும் நிகழ்தகவை அதிகரிக்க, பெரும்பாலான சிதறுதுமுக்கிக் குண்டுபொதிகள், நிறைய குண்டுகளுடன் இருக்கும். ஒரு சிதறுதுமுக்கியின் குண்டுப் பரவல் என்பது, இலக்கின் மீது எறியங்களால் (அல்லது குண்டுகளால்) ஏற்படுத்தப்படும் இருபரிமாணக் கோலத்தை குறிப்பதாகும்.[4] குறிப்பாக பறவைகள், முயல்கள் போன்று பறக்கும் அல்லது வேகமாக நகரும் சிறிய பிராணிகளை வேட்டையாட நிறைய குண்டுகளின் பயன்பாடு கைக்கொடுக்கும். சில சிதறுதுமுக்கி பொதிகளில் பரல் எனப்படும், ஒற்றை உலோக எறியம் மட்டுமே இருக்கும்; மான்களை போன்ற பெரிய பிராணிகளை வேட்டையாட இதை பயன்படுத்துவர்.

சுட்டபின் குண்டுகள் குழலைவிட்டு வெளியேறுகையில், அவை மிக நெருக்கமாக இருக்கும். ஆனால் குண்டுகள் தொலைவாக செல்லச்செல்ல, ஒவ்வொரு குண்டும் பரவலாகி கலைத்துவிடும். இதனால் பல குண்டுகளை சுடுகையில், சிதறுதுமுக்கியின் தாக்கம்மிக்க வீச்செல்லை ஆனது 20 முதல் 50 மீட்டர்களிலேயே இருக்கும். இந்த தாக்கம்மிக்க வீச்செல்லையை கட்டுப்படுத்துவதற்கு, நெரிவு எனப்படும், சிதறுதுமுக்கியின் குழலுக்குள் ஒரு குறுக்கத்தை சுடுநர்கள் பயன்படுத்தலாம். (குழலில் நிரந்தரமாக அல்லது தேர்வு செய்யவல்ல) நெரிவு ஆனது, குழல்-முனையின் விட்டத்தை குறைத்து; குண்டுகள் குழலைவிட்டு வெளியேறுகையில் அவற்றை மேலும் நெருக்கமாக இருக்கும்படி வைப்பதால், தாக்கம்மிக்க வீச்செல்லையை அதிகரிக்கிறது. 

மேலும் பார்க்க  தொகு

மேற்கோள்கள்  தொகு

  1. http://www.theboxotruth.com/docs/bot43.htm பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம் [self-published source]
  2. "Scottish Association for Country Sports' Shotgun definition". Archived from the original on 2008-02-26. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  3. Tungsten shot table பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம், used with permission.
  4. 4.0 4.1 Doyle, Jeffrey Scott. "Shotgun Pattern Testing". FirearmsID.com. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
  5. After bagging 300 birds, researchers declare that No. 2 is best steel shot size for roosters பரணிடப்பட்டது 2007-11-21 at the வந்தவழி இயந்திரம் by Craig Bihrle. Reprinted with permission.
  6. 6.0 6.1 Krishan Vij. Textbook of Forensic Medicine and Toxicology : Principles and Practice, 5/e. p. 240.

வெளி இணைப்புகள்  தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டுபொதி&oldid=3581750" இலிருந்து மீள்விக்கப்பட்டது