குதிரை (சதுரங்கம்)

சதுரங்கம்

குதிரை (Knight) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] இக்காயானது குதிரையினது தலையினதும் கழுத்தினதும் வடிவமைப்பைக் கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு குதிரைகள் வீதம் கொண்டிருப்பர்.[2] சதுரங்கத்தின் ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரைகள் b1, g1 ஆகிய கட்டங்களிலும் கறுப்புக் குதிரைகள் b8, g8 ஆகிய கட்டங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.[3]

குதிரை

நகர்வு தொகு

abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரைகளின் ஆரம்ப நிலை
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கறுப்புக் குதிரை கறுப்புப் புள்ளிகளால் காட்டப்பட்ட எந்தவொரு கட்டத்துக்கும் நகர முடியும். வெள்ளைக் குதிரையின் நகர்வோ வெள்ளைப் புள்ளிகளால் காட்டப்பட்ட இரண்டு கட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சதுரங்கக் காய்கள்
  அரசன்  
  அரசி  
  கோட்டை  
  அமைச்சர்  
  குதிரை  
  காலாள்  

சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும்.[4] இந்த நகர்வு டகரத்தை (ஆங்கிலத்தில் பேரெழுத்து L) ஒத்தது.[5] குதிரை மட்டுமே ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.[6]

abcdefgh
8
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரையானது கறுப்பரசனையும் கறுப்புக் கோட்டையையும் கவைக்குள்ளாக்குகின்றது.

குதிரையின் நகர்வுக் கோலத்தின் காரணமாக, குதிரையானது கவையொன்றை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.

abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
f5 கட்டத்திலிருந்து குதிரை நகர்வுகளின் அடிப்படையிற்றூரம்

வலப்பக்கமுள்ள படத்தில் சதுரங்கப் பலகையில் f5இல் உள்ள குதிரையொன்று ஏனைய கட்டங்களைச் சென்றடைவதற்குத் தேவையான நகர்வுகளின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது.

பெறுமானம் தொகு

குதிரையானது ஏறத்தாழ அமைச்சரின் வலிமையையும் பெறுமானத்தையும் உடையது. அமைச்சரானது நீண்ட வீச்சைக் கொண்டிருந்தாலும் சதுரங்கப் பலகையின் அரைப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. மூடிய நிலையிலுள்ள ஆட்டத்தின்போது குதிரை மிகவும் பயன் மிக்கதாய் அமையும்.

குறியீடு தொகு

இயற்கணிதக் குறியீட்டு முறையில் குதிரைக்கு N எனுங்குறியீடு (K என்பது அரசனைக் குறிப்பதால்) வழங்கப்படுகிறது.[7]

ஒருங்குறி தொகு

ஒருங்குறியில் குதிரைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

U+2658-வெள்ளைக் குதிரை[8]

U+265E-கறுப்புக் குதிரை[9]

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ["சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)]
  2. சதுரங்கக் காய்களின் பட்டியல்
  3. "குதிரைகளை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  4. ["குதிரை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. குதிரை (ஆங்கில மொழியில்)]
  5. ["காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)]
  6. ["குதிரையின் நகர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. குதிரையின் நகர்வு (ஆங்கில மொழியில்)]
  7. "இயற்கணிதச் சதுரங்கக் குறியீட்டை வாசிப்பதும் எழுதுவதும் எப்படி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  8. U+2658: வெள்ளைச் சதுரங்கக் குதிரை (ஆங்கில மொழியில்)
  9. ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்கக் குதிரை (U+265E)' (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_(சதுரங்கம்)&oldid=3731552" இலிருந்து மீள்விக்கப்பட்டது