குதிவாதம் (Plantar fasciitis) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சி.

அறிகுறிகள் தொகு

இந்நோயின் முக்கிய அறிகுறி பாதத்தின் குதிப்பகுதியில் வலி ஏற்படும் . சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதை உணரலாம். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முக்கியமாக அதிகாலையில் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். கவனிக்காது விட்டால் நாட்கள் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் துன்பம் தரக் கூடும்.

காரணிகள் தொகு

குதிவாதம் குதிப்பகுதியிலும், காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் இல்லது பாதப்பகுதியின் தளர்ச்சி அல்லது உடற்பயிற்சியைத் தவறாகச் செய்தல் அல்லது பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு கொடுக்கப்படும் அதிகரித்த வேலைப் பளு (மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்றவை) போன்ற பலவித காரணங்களால் ஏற்படுகிறது. பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியைஉபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோஇ குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதும் காரணமாகலாம்.

எளிய பயிற்சி முறைகள் தொகு

கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிவாதம்&oldid=3481725" இலிருந்து மீள்விக்கப்பட்டது