குந்தல் அணை

பாக்கித்தான் நாட்டு அணை

குந்தல் அணை (Kundal Dam) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ள சுவாபி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[4][5][6] குந்தல் அணையானது தரிசு நிலத்தை வளப்படுத்தவும், வெள்ளத்தை கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் தேவையான தண்ணீரை வழங்கும். அணையின் மூலம் சுமார் 13340 ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெறும். பாக்கித்தான் நாட்டின் நீர் மற்றும் மின்சார அமைச்சகமும் இயக்குநரகம் பொது சிறு அணைகள் பொது நிதியுதவி அளித்துள்ளது, நீர்ப்பாசனத் துறை, கைபர் பக்துன்க்வா அரசு ஆகியவை குண்டல் திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளாக உள்ளன.

குந்தல் அணை
Kundal Dam
குந்தல் அணை ஒரு தோற்றம்
அதிகாரபூர்வ பெயர்குந்தல் அணை
அமைவிடம்Swabi, கைபர் பக்துன்வா மாகாணம்
புவியியல் ஆள்கூற்று
நிலைகட்டுமானம் நிறைவு[1][2][3]
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு14,499,579.2092866 m3 (11,755 acre⋅ft)

குண்டல் அணை 48மீ உயரமும் 320மீ நீளமும் கொண்டதாக குந்தல் அணை உள்ளது. அணையின் இயல்பான பாதுகாப்பு அளவு கடல்மட்டத்திலிருந்து 487.5 உயரமும் முற்றிலுமான சமதள நிலப்பரப்பு 467 மீட்டர்களாகும். பெசாவர் கட்டுமான நிறுவனமொன்று அணையை வடிவமைத்து நிர்வகிக்கிறது. ஒப்பந்ததாரராக சர்வார் அண்ட் கோ என்ற தனியார் நிறுவனமும் நீர்ப்பாசன முறையை பொறியாளர் சலா உத் தினும் வடிவமைத்தனர். நீர்ப்பாசன அமைப்பு மூன்று தலைகீழ் குழாயமைப்பும் பல நீர்வழி கால்வாய்ப் பாலமும் வீழ்ச்சி கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. பிரதான கால்வாயின் வடிவமைப்பு கொள்ளளவு 54 கன அடியாகும்.

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "13 DAMS UNDER CONSTRUCTION IN VARIOUS PARTS OF COUNTRY". radio.gov.pk.
  2. "CDWP approves 38 projects worth Rs244.5 billion". thenews.com.pk.
  3. "Water for power". tns.thenews.com.pk.
  4. "Tarbela fifth extension project gets CDWP's nod". tribune.com.pk.
  5. "Work on 12 small dams underway in KP". thenews.com.pk.
  6. "Kundal Dam". nation.com.pk.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தல்_அணை&oldid=3740399" இலிருந்து மீள்விக்கப்பட்டது