குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அல்லது கியூசிசி என்று அழைக்கப்படும் இது இந்திய ந.ந.ஈ.தி தமிழ் இலக்கிய அமைப்பாகும், இது தற்பாலீர்ப்பு, ஓரினச்சேர்க்கை, இருபாலின ஈர்ப்பு, திருநங்கைகள் மற்றும் பிற பாலியல் ஈர்ப்புகளைப் பற்றிய குயர் இலக்கியங்களை எழுதிவரும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் வருடந்தோறும் சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. [1]

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்
குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்
புனைப்பெயர்கியூசிசி
நிறுவப்பட்டது2017
வகைந.ந.ஈ.தி இலக்கிய அமைப்பு
தலைமையகம்
சேவைகள்
  • குயர் லிட்ஃபெஸ்ட் (சென்னை)
  • ந.ந.ஈ.தி உரிமைகள் மற்றும் வளங்கள்
  • ஆர்வமுள்ள ந.ந.ஈ.தி எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பட்டறை
Founders
மௌலி, எல்ஜே வயலட்
வலைத்தளம்queerchennaichronicles.com

பின்னணி தொகு

2017 ஆம் ஆண்டு  ஓரினச்சேர்க்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மௌலி மற்றும் எழுத்தாளர் எல்ஜே வயலட் ஆகியோரால் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்  எனப்படும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது . அதன் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, சென்னையோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் பால்புதுமைச் சமூகத்தை சேர்ந்த நபர் அல்லது நபர்களின் கதைகளையும் அனுபவங்களையும் சேகரிப்பது மட்டுமல்லாமல் வருங்கால பால்புதுமை சமூகத்தினருக்கு ஆதரவாக இந்த தகவல்களையும் வளங்களையும் ஆவணப்படுத்துவதும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பானது இந்திய பால்புதுமையினர்( ந.ந.ஈ.தி ) இலக்கியங்களையும், வாழ்க்கையையும் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைத்து  ந.ந.ஈ.தி என அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்கள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் மற்றும் காலமுறை வள மேம்பாடு மற்றும் வெளியீடுகளை, சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவின் மூலம் நடத்தி வருகிறது 

குயர் லிட்ஃபெஸ்ட், சென்னை தொகு

வருடாந்திர குயர் இலக்கிய விழா, இந்திய நகரமான சென்னையில், நடைபெறுகிறது. சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள், பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து, அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு, பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது.. [2] [3] [4] [4] [5]

வெளியீடுகள் தொகு

2018 இல் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அதன் முதல் நாவலை பால்புதுமை நல ஆர்வலரும் கவிஞருமான கிரீஷின் [6] கருப்பு பிரதிகலுடன் இணைந்து வெளியிட்டது. 41வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

சமூக நீதி பெருமித கொடி தொகு

 
சமூக நீதி பெருமித கொடி.

ஜூலை 2018 இல், சமூக நீதி பெருமிதக் கொடியானது, இந்தியாவின் சென்னையில், சென்னை குயர் லிட்ஃபெஸ்டில், உலகம் முழுவதும் உள்ள பெருமித கொடியின் மாறுபாடுகளால் ஈர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. [7] [8] இந்தக் கொடியை சென்னையைச் சேர்ந்த ஓரின சேர்க்கை ஆர்வலர் மௌலி வடிவமைத்துள்ளார். சுயமரியாதை இயக்கம், சாதி எதிர்ப்பு இயக்கம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் ஆகியவற்றைக் குறிக்கும் கூறுகளை இக்கொடியின் வடிவமைப்பு உள்ளடக்கியது. உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பெருமிதக் கொடியான வானவில் கொடியின் அசல் ஆறு வண்ணக்கோடுகளைத் தக்க வைத்துக் கொண்டு, அதோடு சமூக நீதி பெருமிதக் கொடியில் கருப்பு சுயமரியாதை இயக்கத்தையும், நீலம் அம்பேத்கரிய இயக்கத்தையும், சிவப்பு இடதுசாரி சித்தாந்த மதிப்புகளையும் குறிக்கிறது. [9]

மேற்கோள்கள் தொகு

  1. Arora, Parthshri (2018-06-19). "How to Start a Queer Collective in India". Vice (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  2. Queer LitFest (2018) | Moulee, Gireesh LS speech (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  3. [Intro] | வரவேற்புரை, மௌலி & கிரீஷ் - சென்னை குயர் இலக்கிய விழா 2019 | QLF 2019 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  4. 4.0 4.1 "Chennai Queer LitFest to spur conversations on inclusive literature". dtNext.in (in ஆங்கிலம்). 2019-09-11. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  5. "Chennai's 1st queer lit fest to focus on Tamil writing". The Times of India (in ஆங்கிலம்). June 28, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  6. "ஒழுக்கங்களுக்கு இடையில்..." Hindu Tamil Thisai (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  7. "LGBTQ meets caste, politics: Social justice pride flag at Chennai Queer LitFest". https://www.thenewsminute.com/article/lgbtq-meets-caste-religion-politics-social-justice-pride-flag-chennai-queer-litfest-84364. 
  8. "#GoodNews: Where LGBTQ Meets Caste – A Pride Flag Inclusive of All". https://www.thequint.com/news/india/social-justice-pride-flag-at-chennai-queer-lit-fest. 
  9. "The Social Justice Pride Flag". https://medium.com/qcc-blog/the-social-justice-pride-flag-635e51b80494. 

வெளி இணைப்புகள் தொகு