குருக்கத்தி மாசி பெரியசாமி கோயில்

குருக்கத்தி மாசி பெரியசாமி கோயில் என்பது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திலுள்ள குருக்கத்தி எனும் ஊரில் அமைந்துள்ள நாட்டார் தெய்வக் கோயிலாகும். இந்தக் கோயில் கொல்லிமலை மாசி பெரியசாமி கோயிலிருந்து பிடி மண் எடுத்துவரப்பட்டு கட்டப்பட்ட கோயிலாகும். [1] இக்கோயில் நாடார் இனத்தவர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மாசி பெரியசாமி

அமைப்பு தொகு

 
கோயில் முகப்பு

முதன்மை வாசலைக் கடந்தபின் உள்ளே ஒரு கூடம் போன்ற அமைப்பு உள்ளது. அங்கு வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி போன்றவை உள்ளன. வேப்ப மரம் உள்ளது. கருவறைக்கு முன்பாக இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், காமாட்சி சன்னதிகள் உள்ளன.

மூலவர் தொகு

மூலவரான மாசி பெரியசாமி சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் கருவறையில் உள்ளார்.

குடமுழுக்கு தொகு

இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று 8 பிப்ரவரி 2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.

விழா தொகு

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதப் பௌர்ணமியின்போது விழா மூன்று நாள்கள் நடத்தப்படுகிறது. முதல் நாள் புடவைக்காரியம்மன் பூசை நடத்தப்படுகிறது. புடவைக்காரி அம்மனுக்கு உருவம் எதுவும் இல்லாத நிலையில் மனதில் நினைத்து வழிபடுகின்றனர். இரண்டாம் நாள் பொங்கல் வைத்தல் மற்றும் எறிகாவல் பூசை நடைபெறுகிறது. மூன்றாம் நாள் காலையில் விருந்து படைக்கப்படுகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. குருக்கத்தி மாசி பெரியசாமி! தினமணி

வெளி இணைப்புகள் தொகு

.