குருதி முடிச்சு

குருதி முடிச்சு அல்லது உருளைக்கலன் முடிச்சு என்பது நைலோனால் ஆன ஒரிழைக் கயிற்றுத் துண்டுகளை இணைப்பதில் சிறப்பாகப் பயன்படத்தக்க ஒரு முடிச்சு ஆகும். இத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பிற முடிச்சுக்கள் கயிற்றின் வலிமையைக் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதைப் போலன்றி, இம் முடிச்சு கயிற்றின் பெரும்பகுதி வலிமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வீச்சுக் கயிற்று மீன்பிடித்தலில் பரவலாகப் பயன்பட்டு வருகிறது.

குருதி முடிச்சு
பெயர்கள்குருதி முடிச்சு, உருளைக்கலன் முடிச்சு
வகைதொடுப்பு வகை
செயற்றிறன்80%
பொதுப் பயன்பாடுநைலோனிலான ஓரிழைக் கயிறுகளைத் தொடுத்தல்

குருதி முடிச்சை முடியும்போது, தொடுக்கவேண்டிய இரண்டு கயிறுகளையும் 6-8 சதம மீட்டருக்கு ஒன்றின் மீதொன்றாகப் பொருந்தியிருக்கும்படி எதிரெதிர்த் திசையில் வைக்கப்படும். ஒரு கயிற்றின் குட்டை முனை மறு கயிற்றைச் சுற்றி 4-6 சுற்றுக்கள் சுற்றப்படும். எஞ்சிய பகுதியின் முனையைத் திருப்பிக் கொண்டுவந்து சுற்றுத் தொடங்கிய இடத்துக்கு முன் இரு கயிறுகளுக்கும் இடையே செருகப்படும். இதைபோலவே மற்றக் கயிற்றின் குட்டை முனையையும் முதல் கயிற்றில் 4-6 தடவைகள் சுற்றி எஞ்சிய முனையைப் பின்னால் கொண்டுவந்து முன்னர் செருகிய முனைக்குப் பக்கத்திலேயே எதிர்த்திசையில் செருகப்படும். கயிறுகள் ஈரமாக்கப்பட்டு இரண்டு கயிறுகளினதும் நீளமான முனைகளைப் பிடித்து இழுப்பதன் மூலம் இறுக்கப்படும்.

குறிப்புகள் தொகு


இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_முடிச்சு&oldid=2742657" இலிருந்து மீள்விக்கப்பட்டது