குரோமெல் (Chromel) என்பது எடைப்படி அண்ணளவாக 90% நிக்கல், 10% குரோமியம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது ANSI E-வகை (குரோமெல்-கான்சுடான்டன்) மற்றும் K-வகை (குரோமெல்-அலுமெல்) வெப்ப இணைகளின் நேர்மறைக் கடத்திகளை உருவாக்கப் பயன்படுகிறது. ஆக்சிசனேற்ற வளிமண்டலங்களில் 1,100 °C (2,010 °F) வரை வெப்பநிலையில் இதைப் பயன்படுத்தலாம். குரோமெல் கான்செப்ட் அலாய்ஸ் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும்.[1]

குரோமெலின் பண்புகள் (எடைப்படி Ni, 90%; Cr, 10%)
பண்பு மதிப்பு
வெப்பநிலைக் குணகம் 0.00032 K−1
மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் 0.706 µΩ m
விசையியல்
உடையும் போது நீட்சி <44%
ஐசோட் தாக்க வலிமை 108 J m−1
மீள்மைக் குணகம் 186 GPa
இழுவிசை வலிமை 620–780 MPa
இயற்பியல்
அடர்த்தி 8.5 g cm−3
உருகுநிலை 1420 °C
வெப்பவியல்
வெப்ப விரிவு 12.8×10−6 K−1 at 20–1000 °C
காற்றில் அதிகபட்ச பயன்பாட்டு வெப்பநிலை 1100 °C
வெப்பக் கடத்துதிறன் 19 W m−1 K−1 at 23 °C

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமெல்&oldid=3674851" இலிருந்து மீள்விக்கப்பட்டது