குறிப்பான் எழுதுகோல்

குறிப்பான் எழுதுகோல் ( marker pen, fineliner, marking pen, felt-tip marker, felt-tip pen, flow) (ஆஸ்திரேலியாவில் marker அல்லது texta ) (இந்தியாவில் sketch pen ) என்பது ஒரு எழுதுகோல் ஆகும். இது சற்று தடிமனாக எழுதக்கூடியது. இதனுள்ளே இதற்கான மை இருக்கக்கூடியது. இதன் முனையில் அழுத்தப்பட்ட இழைகளால் ஆன எழுது முனை இருக்கும்.

ஒரு பெட்டியில் நிரப்பப்பட்ட வண்ண குறிப்பான்கள்
எடுப்பாக்கிகள்

வரலாறு தொகு

லீ நியூமன் என்ற பெயரில் ஓருவகை குறிப்பான் எழுதுகோல் 1910இல் காப்புரிமை பெறப்பட்டிருந்தது.[1] பெஞ்சமின் பஸ்கட்ச் என்பவர் ஒரு "ஊற்றி வர்ணத்தூரிகைக்கு" 1926இல் காப்புரிமை பெற்றிருந்தார்.[2] இந்த வகையான குறிப்பான்கள் விற்பனை மூலம் பிரபலமானது. இவையே தற்கால குறிப்பான்களுக்கு முன்னோடியாகும்.

வகைகள் தொகு

நிரந்தர குறிப்பான்கள் தொகு

நிரந்தர குறிப்பான்கள் என்பவை அழியாத தன்மை உடையவையாகும் இக்குறிப்பான்கள் கண்ணாடி, நெகிழி, கல், மரம், உலோகம் ஆகியவற்றில் எழுதும் வகையில் இருக்கும்.

தற்காலிக குறிப்பான்கள் தொகு

தற்காலிக குறிப்பான்கள் என்பவை எளிதாக அழியக்கூடிய மையைக் கொண்டவை ஆகும். இவ்வகை குறிப்பான்கள் பெரும்பாலும் வெள்ளைப் பலகையில் கற்பித்தல் சார்ந்த இடங்களில் பயன்படுத்தப்படுபவை.

மேற்கோள் தொகு

  1. Lee W. Newman, Marking Pen, U.S. Patent 946,149. January 11, 1910.
  2. "Fountain paintbrush" (PDF). Freepatentsonline.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்பான்_எழுதுகோல்&oldid=3200360" இலிருந்து மீள்விக்கப்பட்டது