குளியல் யாத்திரை

தெய்வங்களின் நீராட்டுத் திருவிழா

குளியல் யாத்திரை ( Snana Yatra ) (ஒடியா: ସ୍ନାନ ଯାତ୍ରା), ஸ்நான ஜாத்ரா ( சமசுகிருதத்தில் தெய்வம் நீராடும் திருவிழா என்று பொருள்படும்) என்றும் உச்சரிக்கப்படும் இது ஜெகன்னாதரின் மங்களகரமான பிறந்தநாள். இது இந்து மாதமான ஆனி மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் தெய்வங்களின் நீராட்டுத் திருவிழாவாகும்.[1]

ஜெகன்னாத குளியல் யாத்திரையின் போது தெய்வங்களின் உடலில் யானை உடை அணிவிக்கப்படுகிறது.
குளிப்பதற்கு முன் துளசியை உடல் முழுவதும் பூசுகின்றனர்.

இது இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகை. இந்து நாட்காட்டியின்படி, ஜெகன்னாதர், பாலபத்ரர், சுபத்ரா, சுதர்சனர் மற்றும் மதன்மோகனா ஆகிய தெய்வங்கள் புரி ஜகன்னாதர் கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, படித்துறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு இத்தெய்வங்களின் சிலை சம்பிரதாயமாக குளிக்க வைத்து, பக்தர்களுக்காக அலங்கரிக்கப்படுகின்றனர்.[2]

மத முக்கியத்துவம் தொகு

இந்நாளில் ஜெகன்னாதரை தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கை. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.[3] முதன்முதலில் தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டபோது இந்த விழாவை மன்னர் இந்திரத்யும்னன் முதல் முறையாக ஏற்பாடு செய்ததாக கந்த புராணம் குறிப்பிடுகிறது.

நடத்தப்படும் விழாக்கள் தொகு

முன்னதாக, தெய்வங்களின் சிலைகள் கர்ப்பகிரகத்திலிருந்து குளியல் மேடைக்கு ஒரு பெரிய ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன. தெய்வங்களை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நாளில், கோயிலின் வடக்கு கிணற்றில் இருந்து மத மந்திரங்களுக்கு துணையாக எடுக்கப்படும் சடங்கு முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரில் 108 பானைகளால் நிரப்பட்ட புனித நீரால் தெய்வங்கள் நீராட்டப்படுகின்றன.[4] மாலையில், நீராடும் சடங்கின் முடிவில், ஜெகநாதரும் பாலபத்ரனும் பிள்ளையாரைக் குறிக்கும் யானை போன்றத் தலைக்கவசம் அணிந்து வருவர். கடவுளின் இந்த வடிவம் 'கஜவேஷம்' என்று அழைக்கப்படுகிறது.

பிறகு, கடவுள்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. மேலும், நோய்வாய்ப்பட்ட அவர்கள் வைத்யத்தின் பராமரிப்பில் தனிமையில் ஓய்வெடுக்க ஒரு அறையில் வைக்கப்படுகிறார்கள்.[5] அனாசாரம் என்று அழைக்கப்படும் இக்காலத்தில் கடவுள்களை பக்தர்களால் தரிசிக்க முடியாது. இந்த நேரத்தில் மூன்று பட சித்ர ஓவியங்கள் பக்தர்களுக்குக் காட்டப்படுகின்றன. அதற்குப் பதிலாக ராஜ வைத்யத்தின் ஆயுர்வேத மருந்து மூலம் கடவுள்கள் பதினைந்து நாட்களில் குணமடைந்து தங்கள் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கத் தொடங்குகிறார்கள் என்று நம்புகின்றனர்.[6]

அனாசார காலத்தில், ஜெகன்னாதர் அலர்நாதராக காட்சியளிக்கிறார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிரம்மகிரியில் உள்ள அலர்நாத மந்திரத்திற்கு செல்கின்றனர் [7]

சான்றுகள் தொகு

  1. "Lavish bath before sickroom stay". telegraphindia.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 25 June 2013. The festival is observed on the full moon day of the Odia month of Jyestha
  2. The official website of the Puri Jagannath temple .
  3. "Lakhs witness deities' bathing ritual in Puri". Hindustan Times, Delhi (subscription required). 15 June 2011 இம் மூலத்தில் இருந்து 8 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160308193618/https://www.highbeam.com/doc/1P3-2374838441.html. 
  4. Mohanty, Rajkumar (2013). "Ceremonial bath over, lords retire to Anasar Ghar - The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2013. they were bathed with 108 pitchers of aromatic and herbal water
  5. Mohapatra, Debabrata (2011). "The skies rain down for divine bath". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 June 2013. would undergo treatment by the shrine vaidyas (ayurveda doctors) for 15 days,
  6. Details of the ceremony
  7. "Rath Yatra: Snana Purnima Likely To Be Held With Minimum Servitors". ODTV. பார்க்கப்பட்ட நாள் May 21, 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளியல்_யாத்திரை&oldid=3742547" இலிருந்து மீள்விக்கப்பட்டது