குளுடாரிக் அமிலம்

குளுடாரிக் அமிலம் (Glutaric acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2C(CH2)3CO2H. இதனுடன் தொடர்புடைய "நேரோட்ட" டைகார்பாக்சிலிக் அமிலங்களான அடிபிக் மற்றும் சக்சினிக் அமிலங்கள் அறை வெப்ப நிலையில் சிறிதளவே நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருந்தாலும், குளுடாரிக் அமிலமானது ஐம்பது சதவிகிதத்திற்கு (50%) மேல் நீரில் கரையும் தன்மைக் கொண்டது.

குளுடாரிக் அமிலம்
Glutaric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டேன் டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
புரோபேன் -1,3- டைகார்பாக்சிலிக் அமிலம்; 1,3-புரோபேன் டைகார்பாக்சிலிக் அமிலம்; பென்டேன் டையோயிக் அமிலம்; n-பைரோ டார்டாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
110-94-1 Y
ChEMBL ChEMBL1162495 Y
ChemSpider 723 Y
EC number 203-817-2
InChI
  • InChI=1S/C5H8O4/c6-4(7)2-1-3-5(8)9/h1-3H2,(H,6,7)(H,8,9) Y
    Key: JFCQEDHGNNZCLN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8O4/c6-4(7)2-1-3-5(8)9/h1-3H2,(H,6,7)(H,8,9)
    Key: JFCQEDHGNNZCLN-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00489 Y
பப்கெம் 743
SMILES
  • C(CC(=O)O)CC(=O)O
பண்புகள்
C5H8O4
வாய்ப்பாட்டு எடை 132.12 கி/மோல்
உருகுநிலை 95-98 °செ
கொதிநிலை 200 °செ/20 மிமிபாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

பியூட்டைரோ லேக்டோன் வளையத்தைப் பொட்டாசியம் சயனைட் கொண்டு திறப்பதன் மூலம் கிடைக்கும் கலந்த பொட்டாசியம்-கார்பாக்சிலேட்-நைட்டிரைலை நீராற் பகுத்து இந்த டைகார்பாக்சிலிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.[1] மாற்றாக, நீராற் பகுத்த பின், டைஹைட்ரோபிரானை உயிர்வளியேற்றம் செய்வதன் மூலமும் குளுடாரிக் அமிலம் பெறப்படுகிறது. மற்றொரு முறையில், டைபுரோமோபுரோபேனை சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிய வைத்துக் கிடைக்கும் டைநைட்டிரைலை நீராற் பகுத்து குளுடாரிக் அமிலத்தை உருவாக்கலாம்.

பயன்கள் தொகு

பொதுவான நெகிழியாக்கி மற்றும் பாலி எஸ்டர்களின் முன்னோடியான 1,5-பென்ட்டேன்டையோல், குளுடாரிக் அமிலம் மற்றும் அதன் வழிப் பொருள்களைக் கொண்டுத் தயாரிக்கப்படுகின்றது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. G. Paris, L. Berlinguet, R. Gaudry, J. English, Jr. and J. E. Dayan (1963). "Glutaric Acid and Glutaramide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0496. ; Collective Volume, vol. 4, p. 496
  2. Peter Werle and Marcus Morawietz "Alcohols, Polyhydric" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 2002, Wiley-VCH: Weinheim. DOI 10.1002/14356007.a01_305
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுடாரிக்_அமிலம்&oldid=2744907" இலிருந்து மீள்விக்கப்பட்டது